நடிகர் ராதாரவி & கார்த்திக்; பாஜகவில் சேருவது பற்றி ஆலோசனை
தமிழகத்தில் இருந்து பாஜகவில் சேருவதற்கு பல நடிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர் என ராதாரவி தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் கார்த்திக்கிடம் பேசி வருவதாக கூறியுள்ளார்.
ஒரு புறம் பாஜக ஆதரவாளர்கள் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மறுபுறம் அதை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் வெற்றிமாறன் உட்பட சில பிரபலங்களும் குடியுரமை சட்டத்தை எதிர்த்தனர். இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே எதிரான சட்டம் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறினார்.
இந்நிலையில் நடிகர்கள் ராதாரவி மற்றும் கார்த்திக் பாஜகவில் சேருவது பற்றி காலந்தோசித்து வருகின்றனர்.