Home சினிமா கோலிவுட் இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம்-க்கு ஒரே கோயில்!

இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம்-க்கு ஒரே கோயில்!

378
0
Raghava Lawrence Temple

Raghava Lawrence இந்து, கிறிஸ்தவம் மற்றும் முஸ்லீம் ஆகிய 3 மதங்களுமே வழிபடும் வகையில், கோயில் ஒன்றை ராகவா லாரன்ஸ் கட்ட இருப்பதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தொண்டு நிறுவனம் (Larencce Charitable Trust) ஒன்றை நடத்தி வருகிறார்.

அதன் மூலம் இலவசமாக கல்வி, மருத்துவ உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு நடனம், பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதானவர்கள் என்று பலருக்கும் உதவி வருகிறார்.

ராகவா லாரன்ஸின் தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை சிறப்பிக்கும் வகையில், திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தர திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முதலாவதாக ரூ.1.5 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளுக்கு என்று சொந்தமாக வீடு கட்டித்தரவும் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக நிலம் வழங்கப்பட்டு, நிதியுதவி பெறப்பட்டு அதன் மூலம் வீடு கட்டித்தர திட்டம் வகுத்துள்ளார். யாரெல்லாம், நிதியுதவி அளிக்கிறார்களோ அவர்கள் எல்லாம் எங்களுக்கு கடவுள்தான்.

அந்த வகையில், எங்கள் எல்லோருக்கும் அக்‌ஷய் குமார் கடவுள்தான். அவரது இந்த உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Transgenders Home திருநங்கைகளுக்கு என்று வீடு கட்டும் முயற்சியின் முதல் பகுதியான பூமி பூஜை குறித்த தேதி விரைவில், அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தற்போது இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவம் என்று அனைத்து மதத்தினரும் வழிபடும் வகையில் கோயில் ஒன்றை கட்ட இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஆம், ராகவேந்திரா சாமியின் (Raghavendra Swami Jayanthi) பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மதம் மற்றும் சாதி இந்த இரண்டினாலும் தான் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள். எம்மதமும் சம்மதம் என்று கருதும் அனைவரும் இங்கு வந்து வழிபாடு செய்யலாம்.

அவர்களுடன் இணைந்து நானும் வழிபடுவேன். பசிக்கும், நெருப்பிற்கும் சாதி, மதம் தெரியாது.

ஆதலால், பசி வந்தால் அனைவரும் சமமாக உணவருந்தும் வகையில், புதிதாக கட்டப்படும் கோயிலில் அன்னதானக் கூடம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இப்போதிலிருந்தே இதற்காக இடம் தேடி வருகிறேன். போதிய இடம் கிடைக்க வேண்டி அனைத்து கடவுளையும் பிரார்த்திக்கிறேன். எனக்கு உங்களது ஆதரவும், ஆசீர்வாதமும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா 3. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, காஞ்சனா 3 படத்தின் ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடிப்பதாகவும், ராகவா லாரன்ஸ் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இப்படத்திற்கு லக்‌ஷ்மி பாம் என்றும் டைட்டில் வைக்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதற்கிடையில், அக்‌ஷய் குமாருக்கும், ராகவா லாரன்ஸுக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமா பிரச்சனை எழுந்தது.

இதன் காரணமாக லக்‌ஷ்மி பாப் படத்திலிருந்து ராகவா லாரன்ஸ் விலகுவதாக தகவல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் லக்‌ஷ்மி பாம் திரைக்கு வரயிருக்கிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleநடிகர் ராதாரவி & கார்த்திக்; பாஜகவில் சேருவது பற்றி ஆலோசனை
Next articleAustralian Associated Press; 85 வயது செய்தி நிறுவனம் மூடப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here