விஜய் வீடு: சல்லடை போட்டு சலித்த இன்கம் டாக்ஸ்… நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: விடிய விடிய விஜய்யிடம் விசாரணை.
விஜய்யிடம் விசாரணை
‘பிகில்’ திரைப்பட சம்பளம் தொடர்பான சந்தேகத்தில் நடிகர் விஜய் வீட்டில் இரண்டு நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை. நடிகர் விஜய்யிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
‘பிகில்’ சம்பள சர்ச்சை
விரல் விட்டு எண்ணக்கூடிய மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சமீபத்தில் அவர் நடித்த திரைப்படமான ‘பிகில்’ வசூலில் சாதனை படைத்து பாக்ஸ் ஆபீசில் முதல் 10-க்குள் வந்தது.
வசூல் வேட்டையில் சாதனை படைத்த பிகில் படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம் குறித்த சந்தேகம் எழுந்துள்ளதால், வருமான வரித்துறையினர் விஜய்யின் அலுவலகம் மற்றும் வீடுகளில் 2-வது நாளாக இன்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனைக்கு காரணம்
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து விஜய் நடித்த படம் தான் ‘பிகில்’ வசூல் வேட்டையில் முதல் 10 இடங்களுக்குள் வந்தது.
இந்நிலையில் பட தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த கணக்கில் நடிகர் விஜய்க்கு கொடுத்த ஊதியம் குறித்து கணக்கு காட்டியுள்ளது.
அந்த கணக்கும் நடிகர் விஜய் கொடுத்த கணக்கும் முரண்பாடாக இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யிடம் விசாரணை
இதையடுத்து வருமானவரித்துறை நடிகர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்த தொடங்கியது.
நேற்று நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சந்தித்த வருமானவரித்துறை அதிகாரிகள், விஜய்யின் தனிப்பட்ட அறையினை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அவரை நெய்வேலியிலிருந்து சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு இரவு 9 மணிக்கு அழைத்து வந்தனர்.
பத்திரிக்கையாளர்களைக் கண்டவுடன் விஜய் முகத்தை மறைத்துக் கொண்டார். காருக்குள் பதுங்கிக் கொண்டார்.
அதுமட்டுமின்றி அவரிடம் இன்கம் டாக்ஸ் பற்றி விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மற்றும் விஜய்யின் வீட்டை அங்குலம் அங்குலமாக சல்லடை போட்டு சலித்து பல டாக்குமெண்டுகளைக் கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
32 இடங்களில் சோதனை (நடிகைகள் உள்பட)
நடிகர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகங்கள் மட்டுமின்றி தயரிப்பாளர், நடிகைகள் என மொத்தம் 32 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர் வருமான வரித்துறையினர்.
ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள் (கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ்), வீடுகள், சினிமா தயாரிப்பு, திரைப்பட விநியோகம், மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள பைனான்சியர் வீடு என தி.நகர், வில்லிவாக்கம், நாவலூர், மதுரைவாயில் ஆகியவற்றில் உள்ள அலுவலகம், தியேட்டர் ஆகியவற்றில் ஒரே நேரத்திலும், மற்றும் நடிகைகள் சமந்தா, நயன்தாரா வீட்டிலும் சோதனைகள் நடைபெற்றது.
அன்புச்செழியன் அதிமுக பிரமுகர் கம் பைனான்சியர்
இதுமட்டுமின்றி மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் கனி தெருவை சேர்ந்த அன்புச்செழியன் என்பவரின் வீடு அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவர் சென்னையில் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தாயார் வீடு மதுரை கீரைத்துறையில் உள்ளது.
அங்கும் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் பைனான்சியர் மட்டுமல்ல அதிமுக பிரமுகர் என்பது குறிப்பிட்டத்தக்கது.