சிமோகா சிறைச்சாலையில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்புக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
மாநகரம் படத்திற்குப் பிறகு இரண்டு வருடமாக ‘கைதி’ படத்தின் கதையை வைத்துக்கொண்டு வாய்ப்புக்காக காத்திருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
கைதி படத்தில் நடிக்க கார்த்தி ஒப்புக்கொண்டது, லோகேஷ் கனகராஜுக்கு அதிஷ்டமோ இல்லையோ? நடிகர் கார்த்திக்கு மிகவும் அதிஷ்டம்.
தீரன் பட வெற்றி, தேவ் படம் தோல்வி என இருந்த நிலையில் கைதி வெளியானது. கார்த்தியை அப்படம் வேறு ஒரு உயரத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது.
லோகேஷ் கனகராஜ் மீது சினிமா ரசிகர்கள் பார்வை மட்டுமல்லாது பல முன்னணி ஹீரோக்கள் பார்வையும் திரும்பியது.
கைதிக்கு பிறகு கைதி இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக லோகேஷ் கனகராஜின் விக்கிபீடியா பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதற்குள் விஜய்யின் அழைப்பு வரவே லோகேஷ் தற்பொழுது தளபதி 64 படத்தை இயக்கி வருகிறார்.
நடிகர் கார்த்தியும் அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து ‘தம்பி‘ படத்தில் நடித்து வருகிறார். தற்பொழுது கைதி-2 படமும் லோகேஷ் கனகராஜின் விக்கி பக்கத்தில் இருந்து தூக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், கர்நாடக அரசின் சிறப்பு அனுமதியுடன் சிமோகா சிறையில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி சார்ந்த சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
தனது அடுத்த படத்திலும் சிறை, கைதி மற்றும் சண்டைக்காட்சி எனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இதனால் தளபதி 64 படம் எப்படி இருக்கப்போகிறதென? ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.
இப்படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் சூர்யாவுடன் இணைவாரா? அல்லது கைதி-2 படத்தின் பணிகள் துவங்கப்படுமா? என கேள்வியும் எழுந்துள்ளது.