Home சினிமா இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – திரைவிமர்சனம்

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – திரைவிமர்சனம்

732
0
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – திரைவிமர்சனம் | Irandam Ulagaporin Kadaisi Gundu – Tamil Movie Review

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தவுடன் இந்தியாவில் எஞ்சி இருந்த அணுகுண்டுகளை செயலிழக்கச்செய்ய முடிவு செய்கிறது இந்தியா.

அணுகுண்டை செயலிழக்கச் செய்வதாகக்கூறி டெண்டர் எடுத்த போலி நிறுவனம் அதை ஆழ்கடலில் மறைத்துவிடுகிறது.

அந்த எஞ்சிய அணுகுண்டுகள் கரைஒதுங்கி இந்தியர்களைக் காவு வாங்குறது. அதில் ஒரு குண்டு ஹீரோ அட்டகத்தி தினேஷிடம் வருகிறது.

ஏற்கனவே ஒரு அணுகுண்டுவால் குடும்பத்தை இழந்த ரித்விகா, மீண்டும் ஒரு குண்டு கரை ஒதுங்கியதும் இந்தியாவில் நடந்த ஊழலை அம்பலப்படுத்தப் பாடுபடுகிறார்.

இறுதியில் அந்தக் குண்டு வெடித்ததா? அல்லது ஊழல் அம்பலமானதா? என்பதே மீதிக்கதை.

படத்தில் வரும் இரும்புக்கடை காட்சிகள் மட்டும் தத்ரூபமாக படம் பிடிக்கப்படவில்லை, அங்கு எழும் சப்தங்களும் நுணுக்கமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

தியேட்டரில் தான் இருக்கிறோமா அல்லது பழைய இரும்புக்கடைக்குள் சென்று விட்டோமா என்கிற அளவிற்கு படம் ஆரம்பித்தது முதலே சவுண்ட் எபெக்ட் இஞ்சினியர் டங்… டொய்ங்.. என இரைச்சலைக் கொடுக்கத்துவங்கிவிட்டார்.

பின்னர் தான் இயக்குனர் இரும்புக்கடையில் வேலைசெய்தவர் எனத் தகவல் கிடைத்தது. அடடே… அதனால் தான் இரும்புக்கடை பற்றி இவ்வளவு தெளிவாக காட்சியமைப்பு செய்துள்ளார்.

வித்தியாசமான, இதுவரை பேசப்படாத கதைக்களம் எனவே படம் விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருந்தது.

முதல் முறையாக பா.ரஞ்சித் ஜாதி முத்திரை பதிக்காத படத்தைத் தயாரித்து உள்ளார் என சபாஷ் போட்டுக்கொண்டு படம் பார்த்தால், அடுத்த சில நிமிடங்களிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

அணுகுண்டு பற்றிய மையக்கதைக்கும் ஜாதிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாதபோதும் கூட…. வலுக்கட்டாயமாக வேற்று ஜாதி, காதல் கதையைப் புகுத்தி விட்டனர்.

தான் சம்பந்தப்பட்ட எல்லாப் படங்களிலும் ஜாதிச் சாயம் இருக்க வேண்டும் என்று ரஞ்சித் கதையில் மாறுதல் செய்தாரா? அல்லது ஜாதிச் சாயம் உள்ள கதையைத் தேர்வு செய்து தயாரிக்கின்றாரா? என்று தான் புரியவில்லை.

ஜாதி பற்றி பேசியது தவறில்லை. ஆனால் அதுவே படத்திற்கு பெரிய மைனசாக அமைந்துவிட்டது.

படத்தின் இறுதியில் கூறப்பட்ட ஹிரோஷிமா, நாகாசாகியில் வசித்த தந்தையின் கதை படத்திற்கு சற்று பலமாக அமைந்தது.

காதல் காட்சிகளை நீக்கிவிட்டு இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தைப் பார்த்தால் நிச்சயம் ஒரு நல்ல படம் என்றே கூறலாம்.

Irandam Ulagaporin Kadaisi Gundu wikipedia

Previous articleசிமோகா சிறையில் விஜய்; மீண்டும் கைதியா?
Next articleவெறிபிடித்த இந்திய வீரர்கள்; மிரண்டுபோன பிளாக் பேந்தர்ஸ்!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here