Home சினிமா கோலிவுட் Corona: வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய ரோஜா!

Corona: வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய ரோஜா!

486
0
MLA Roja Help Pregnant Woman

MLA Roja Help Pregnant Woman; வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய ரோஜா!தனது காரை கொடுத்து கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்திற்கு நடிகை ரோஜா உதவி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரோஜா. மறைந்த தமிழக முதல்வரை தனது ரோல் மாடலாக கொண்டவர்.

ஆந்திரா மாநிலத்தில் உள்ள நகரி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். அவரது தொகுதியில் 4 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் உணவகத்தையும் திறந்து வைத்துள்ளார்.

தொடர்ந்து நகரி தொகுதியில் ரோகா ஆற்றி வரும் பங்களிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடி வந்து ரோஜா உதவியும் செய்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியில் இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் 12க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக தனது நகரி தொகுதியில் மருத்துவ முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கு பிரசவத்திற்கு உரிய போதுமான வசதி இல்லை.

இதன் காரணமாக மேல் சிகிச்சைக்காக திருப்பதி மகளிர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், ஆம்புலன்ஸ் வசதி இல்லை. வேறொரு ஆம்புலன்ஸ் வரும் வழியிலேயே கோளாறு காரணமாக நின்றுவிட்டது.

இதையெல்லாம் அறிந்த ரோஜா சற்றும் யோசிக்காமல், தனது சொந்த காரை கொடுத்து, கர்ப்பிணி பெண்ணை அதில் ஏற்றிக்கொண்டு திருப்பதி மகளிர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி செய்துள்ளார்.

ரோஜாவின் இந்த செயலைக் கண்டு கர்ப்பிணிப் பெண்ணின் குடும்பத்தினர் இரு கரம் கூப்பி வணங்கியுள்ளனர்.

மேலும், மருத்துவ நிர்வாகமும் ரோஜாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleJio free data : எக்கச்சக்க சலுகைகள் வழங்கியுள்ளது ஜியோ
Next articleஎன்ன அது கருமம்: கணவரின் போட்டோ போட்ட சமந்தாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here