Anupama Parameswaran; தனது ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதோடு, மார்ஃபிங் படங்களை வெளியிட்டதற்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் கோபமாக பதிலளித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் வந்த கொடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
தற்போது தள்ளி போகாதே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
தமிழைத் தவிர தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், அனுபமா பரமேஸ்வரனின் ஃபேஸ்புக் பக்கத்தை சிலர் ஹேக் செய்து வெளியிட்டுதோடு இல்லாமல், அவரது புகைப்படங்களை மார்ஃபிங்கும் செய்து வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அனுபமா பரமேஸ்வரன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இந்த முட்டாள்தனங்களுக்கு எல்லாம் நேரமிருக்கும் அருவருப்பான நபர்களுக்கு, உங்கள் வீட்டில் அம்மா, அக்கா என்று யாருமே இல்லையா?
உங்கள் மூளையை இது போன்ற முட்டாள்தனங்களுக்குப் பயன்படுத்தாமல் ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்காக பயன்படுத்துங்கள்.
இதைத் தெளிவுபடுத்த விரும்பினேன் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.