Mantra Birthday Today; விஜய், அஜித் பட நடிகை மந்த்ரா பர்த்டே டுடே! விஜய், அஜித் ஆகியோருக்கு ஜோடியாக நடித்த நடிகை மந்த்ரா இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகை மந்த்ராவின் 40ஆவது பிறந்தநாள் இன்று.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை மந்த்ரா. இவர், விஜயா மற்றும் ராசி என்றும் அழைக்கப்படுகிறார்.
தேவையானி உடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 1989 ஆம் ஆண்டு வந்த எல்லாமே என் தங்கச்சி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, தளபதி விஜய்யின் லவ் டுடே படத்தில் நடித்தார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது,
ரெட்டை ஜடை வயசு, கொண்டாட்டம், கல்யாண கலாட்டா, புது குடித்தனம், கண்ணன் வருவான், குபேரன், சிம்மாசனம், ராஜா, ஆளுக்கொரு ஆசை, சுயேட்சை எம்.எல்.ஏ., ஒன்பதுல குரு, வாலு, கவலை வேண்டாம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழைத் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகை மந்த்ரா இன்று தனது 40 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.
அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மந்த்ராவின் பிறந்தநாளை முன்னிட்டு ஹலோவில், HBD மந்த்ரா என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.