Ritu Varma; ரித்து வர்மா இன்று தனது 30ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தனுஷ் நடிப்பில் வந்த வேலையில்லா பட்டதாரி 2 (VIP 2) படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரித்து வர்மா.
அனிதா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ராம்குமார் (எம்ஜேஸ்ரீராம்). அனிதாவின் தந்தை.
இவரது கன்ஸ்ட்ரக்ஷனில் தான் ரகுவரன் (தனுஷ்) இன்ஜினியராக வேலை பார்ப்பார். இவரை விலைக்கு வாங்க வசுந்தரா (கஜோல்) முயற்சி செய்வார். ஆனால், அது முடியாமல் போய்விடும்.
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்து வர்மா.
இப்படத்தைத் தொடர்ந்து அண்மையில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் மீரா/மதுமிதா/இஸிதா ஆகிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் (Kannum Kannum Kollaiyadithaal) படத்தை அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கியுள்ளார்.
இப்படத்தில் துல்கர் சல்மான், ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன், கௌதம் மேனன், அனிஷ் குருவில்லா ஆகியோர் நடித்துள்ளனர்.
துல்கர், ரக்ஷன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆன்லைனில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கி அதில் திருட்டுத்தனம் செய்து பணம் சம்பாதித்து வந்தனர்.
ரித்தி வர்மா, வீடு வீடாக சென்று பியூட்டிசியன் வேலை செய்பவர். இவரை துல்கர் காதலிக்க, ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்கின்றனர்.
ரித்து வர்மாவின் தோழி நிரஞ்சனியை ரக்ஷன் காதலிக்கிறார். ஆனால், இருவருமே தாங்கள் செய்யும் திருட்டுத்தனம் குறித்து காதலிகளிடம் தெரிவிக்கவில்லை.
ஒருகட்டத்தில் திருட்டுத்தனத்தை விட்டுவிட்டு, கோவா சென்று ஹோட்டல், பியூட்டி பார்லர் வைத்து செட்டிலாகலாம் என்று முடிவு செய்து கோவா செல்கின்றனர்.
அவர்களுடன் ரித்து வர்மா, நிரஞ்சனி ஆகியோருடம் செல்கின்றனர்.
இதற்கிடையில், டிஜிபியான கௌதம் மேனன் அவர்களை தேடி கோவா வருகிறார்.
ஆனால், அவர் வருவதற்கு முன்னரே துல்கர், ரக்ஷன் வைத்திருக்கும் பணத்தை எடுத்துவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளனர்.
அதன் பிறகு தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்து ரக்ஷன், துல்கர் என்ன செய்கிறார்கள்? நிரஞ்சனி, ரித்துவை கவுதம் மேனன் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை.
இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படத்தின் 2 ஆம் பாகமும் உருவாக இருப்பதாக இயக்குநர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இப்படத்திற்கு ரித்து வர்மாவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது என்றே கூறலாம்.
தமிழைத் தவிர தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் ரித்து வர்மா இன்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படக்குழுவினரும் ரித்து வர்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனவர்.
அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாங்களும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.