Home சினிமா கோலிவுட் வங்கியில் கொள்ளையடிக்கும் விக்ரம் பிரபு: அசுரகுரு ஸ்னீக் பீக்!

வங்கியில் கொள்ளையடிக்கும் விக்ரம் பிரபு: அசுரகுரு ஸ்னீக் பீக்!

286
0
Asuraguru Sneak Peek

Asuraguru Sneak Peek; அசுரகுரு ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள அசுரகுரு படத்தின் ஸ்னீக் பீக் (Asuraguru Sneak Peek) வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குநர் ராஜ்தீப் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மகீமா நம்பியார் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் அசுரகுரு (Asuraguru).

ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் கதையை மையப்படுத்தி இந்தப் படம் வரும் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இதனை முன்னிட்டு தற்போது அசுரகுரு ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், வங்கிக்குள் நுழையும் விக்ரம் பிரபு, முதலில் கேமராவை சேமர் மூலமாக செயலிழக்கச் செய்கிறார்.

அதன் பிறகு வங்கியில் பணம் எடுப்பது போன்று அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறார்.

இறுதியில், ஒரு அறையில் துளையிட்டு நூதன முறையில் வங்கி பணத்தை கொள்ளையடிக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க, மகிமா நம்பியார், திருட்டுச்சாவி மூலம் விக்ரம் பிரபு வீட்டிற்குள் நுழைகிறார்.

விக்ரம் பிரபு வங்கியில் கொள்ளையடிப்பதற்கு போட்டுவைத்த திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்கிறார்.

இதற்கிடையில், வங்கி ஊழியர் பாதுகாப்பு அறைக்குள் நுழைந்து பணத்தை எடுக்க முயற்சிகிறார். ஆனால், அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

அப்படியே அசுரகுரு ஸ்னீக் பீக் முடிகிறது. ஆனால், விக்ரம் பிரபு பணம் முழுவதையும் கொள்ளையடித்தாரா இல்லையா? ஏன் வங்கிக்கு வந்தார்? என்பது போன்ற கேள்விகளுடன் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணேஷ் ராகவேந்திரா படத்திற்கு இசையமைத்துள்ளார். அசுரகுரு படத்தில் விக்ரம் பிரபு உடன் இணைந்து யோகி பாபு, சுப்பாராஜூ ஆகிஹ்யோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரித்து வர்மாவிற்கு இன்று பிறந்தநாள்!
Next articleஅண்ணன் வந்தா ஆட்டம் பாம் டும்மு: வாத்தி லிரிக் வீடியோ வெளியீடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here