Home சினிமா கோலிவுட் வைரலாகும் நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சிநேகா புகைப்படம்!

வைரலாகும் நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சிநேகா புகைப்படம்!

673
0
Sripriya Daughter Sneha

Sripriya Daughter Sneha; வைரலாகும் நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சிநேகா புகைப்படம்! முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சிநேகாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சிநேகா அடுத்து ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவை கலக்கியவர் நடிகை ஸ்ரீபிரியா. ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிவாஜி கணேசன் என்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இவர், கடந்த 1988 ஆம் ஆண்டு மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நாகர்ஜூனா என்ற மகனும், சிநேகா என்ற மகளும் இருக்கின்றனர்.

எல்லா நடிகைகளைப் போன்றும் திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். அதன் பிறகு டிவி சீரியல்களில் நடிக்கத் துவங்கினார். தொடர்ந்து சினிமாவிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

சினிமாவில் கமல் ஹாசன் உடன் இணைந்து பல படங்களில் நடித்த ஸ்ரீபிரியா, அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியல் வசனம் பேசி வருகிறார்.

என்னதான் சினிமா துறையில் இருந்தாலும் ஸ்ரீபிரியா இதுவரை தனது மகன், மகள் பற்றி தெரிவிக்காமல் இருந்தார்.

22 ஃபிமேல் கோட்டையம் என்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான மாலினி 22 பாளையங்கோட்டை என்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது தனது மகள் சிநேகாவை கேமிரா முன்பு அறிமுகம் செய்து வைத்தார்.

சிநேகா லண்டனில் சட்டம் படித்து அங்கேயே வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் சிநேகா விரைவில் சினிமாவில் ஹீரோயினாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சிநேகாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleமுதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Next articleகுடும்பங்கள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்: FamiliesFavouriteSK டிரெண்டிங்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here