Home சினிமா கோலிவுட் நாங்க கேட்கவே மாட்டோம்: ஹலோவில் டிரெண்டாகும் அட்வான்ஸ் HBD அஜித்!

நாங்க கேட்கவே மாட்டோம்: ஹலோவில் டிரெண்டாகும் அட்வான்ஸ் HBD அஜித்!

374
0
Thala Ajith

Thala Ajith; நாங்க கேட்கவே மாட்டோம்: ஹலோவில் டிரெண்டாகும் அட்வான்ஸ் HBD அஜித்! வரும் மே 1 ஆம் தேதி தல அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், ஹலோவில் அட்வான்ஸ் HBD அஜித் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

ஹலோவில் அட்வான்ஸ் HBD அஜித்  என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் அஜித். தனது விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் முன்னேறியவர்.

இவருக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார். படங்களில் நடிப்பதோடு சரி, வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியில் வரவே மாட்டார்.

இவரை எப்படியாவது, பார்த்துவிடமாட்டோமா என்று ஏங்காதவர்கள் எவரும் இருக்கவே மாட்டார்கள்.

அஜித் எந்தவித சமூக வலைதள பக்கத்திலும் இல்லை. அரசியல் பற்றி எப்போதும் பேசுவதும், அரசியல் கட்சியை ஆதரிப்பதும் இல்லை.

பல தோல்விகளையும் கடந்து இன்று சினிமாவில் சாதித்து வருகிறார். ஒரு நடிகர் மட்டுமல்லாமல், போட்டோகிராஃபர், பைக் மற்றும் கார் ரேஸர், சமையல் வல்லுநர், துப்பாக்கி சுடும் வித்தகர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார். தற்போது இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், வரும் மே 1 ஆம் தேதி தல அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதையடுத்து, அவரது ரசிகர்கள் டுவிட்டர், ஹலோவில் ஹேஷ்டேக் உருவாக்கி அஜித் பிறந்தநாளை இப்போதிலிருந்தே கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக ரசிகர்கள் யாரும் தனது பிறந்த்நாளை கொண்டாட வேண்டாம். மேலும், Common DP வச்சு சிறப்பிக்க வேண்டாம் என்று அஜித் கேட்டுக்கொண்டுள்ளார்.

அப்படியிருந்தும், நாங்க கேட்கவே மாட்டோம் என்று தல ரசிகர்கள் அவரது புகைப்படங்களை பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.

மேலும், அட்வான்ஸ் HBD அஜித், Thala Ajith BDay Gala CDP, Thala Birthday Mashup ஆகிய ஹலோ ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் அஜித்தைப் பற்றி கவிதை, அவரது நடிப்பில் வந்த பாடல்கள், புகைப்படங்கள் என்று பலவற்றை பகிர்ந்து வருகின்றனர்.

அஜித் பற்றி ரசிகர் ஒருவர் கூறியிருப்பதாவது;

மே -1 தல திருவிழா

REEL நடிகர்களுக்கு நடுவே ஒரு

REAL மனிதர்…

மிகப் பெரிய சொத்தென பெரும்

ரசிகர் பட்டாளம் கொண்டவர்…

பல அறுவை சிகிச்சை கண்டு

பல தோல்விகளைக் கடந்து

பல வலிகளையும் கண்டு

ரசிகனுக்காக இன்றளவும்

வலிமையுடன் உழைக்கும் நடிகனுக்கு

பிறந்த நாள் வாழ்த்துகள்…

NELLAI SOUTH THALA FANS என்று குறிப்பிட்டுள்ளார்..

SOURCER SIVAKUMAR
Previous articleஇப்படியொரு பர்த்டே கிப்ட் கேட்ட பிரியங்கா: கிடச்சுச்சா இல்லையா?
Next articleஹாலிவுட்டில் நடித்து புகழ்பெற்ற இந்தி நடிகர் இர்பான் கான் மரணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here