Priyanka Deshpande; இப்படியொரு பர்த்டே கிப்ட் கேட்ட பிரியங்கா: கிடச்சுச்சா இல்லையா? விஜய் டிவி புகழ் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
விஜய் டிவி புகழ் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே நேற்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
மகராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி பிறந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. அதன் பிறகு கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தார்.
சொந்த ஊரில் பள்ளி படிப்பை முடித்த பிரியங்கா மேற்படிப்புக்காக சென்னைக்கு வந்துள்ளார். எத்திராஜ் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார்.
ஆனால், மீடியா துறையில் போராடி வந்த பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில ஆண்டுகள் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். அதன் பிறகு சன் தொலைக்காட்சியில், சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக இருந்துள்ளார்.
அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்தார். சினிமா காரம் காஃபி என்ற நிகழ்ச்சியை மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கினார்.
ஏர்டெல் சூப்ப சிங்கர் ஜூனியர் சீசன் 4, ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 5, கிங்ஸ் ஆப் டான்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று தனது 30 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அவரது சகோதரனே வீட்டில் கேக் செய்துள்ளார்.
மேலும், நேற்று ஒருநாள் முழுவதும் பிரியங்காவை கிச்சன் பக்கமே விடவே இல்லையாம். அதோடு, முதல் முறையாக தனது பிறந்தநாளை குடும்பத்தோடு சேர்ந்து கொண்டாடியுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.
தனது பிறந்தநாள் சிறப்பு குறித்து பேசிய பிரியங்கா கூறுகையில், நேற்று இரவிலிருந்து என்னை கிச்சன் பக்கம் யாருமே விடவே இல்லை.
இதுதான் சரியான நேரம் என்று அனைவரையும் அது எடுத்துட்டுவா, தண்ணீர் எடுத்துட்டு வா என்று வேலை வாங்கினேன்.
எனது தம்பி எனக்காக கேக் செய்துள்ளான். ரோஹித் தேஷ்பாண்டேக்குள்ள இப்படியொரு திறமை இருக்குமா என்று நான் யோசிக்கவே இல்லை.
அப்புறம் இரவு 12 மணிக்கு கேக் வெட்டி ஒரே கொண்டாட்டம் தான். அதன் பிறகு மாடிக்கு சென்று பாட்டு பாடி, டான்ஸ் ஆடி ஒரே ஜாலியாக இருந்தோம்.
அம்மா என்னுடைய பிறந்தநாளுக்கு என்ன வேண்டுமென்றால் கேட்டாங்க. அதை வாங்கி தருவதாக சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அதெல்லாம் வேண்டாம்.
நான் இன்றைக்கு ஒரு கிப்ட் கேட்டேன். 2 மணிநேரம் எனது தம்பி என்னுடைய காலை பிடித்து விட வேண்டும். 2 மணி நேரம் பிரவீன் எனக்கு தலையை அமுக்கி விட வேண்டும்.
அம்மா எனக்கு தலையில் எண்ணெய் தேய்த்து விட வேண்டும். தலையை கோதி விட்டுக்கொண்டே இருந்தால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இதையெல்லாம் நீங்கள் எனக்கு கிப்டா கொடுக்க வேண்டும் என்று அவர்களிடத்தில் கேட்டு இருக்கிறேன்.
அதன் பிறகு பிறந்தநாள் கேக்கை சாப்பிட்ட பிரியங்கா ஒன்று புளூபெர்ரி ஒயிட் சாக்குல் என்றார். இன்னொரு கேக் மாகாபா ஆனந்த் மனைவி எனக்கு ரெடி பண்ணிய கேக் கொடுத்தாங்க.
நியூஸ் பேப்பரிலும் வாழ்த்து சொல்லியிருக்காங்க. இன்றைக்கு செடியூல் படி பார்த்தால் எனக்கு சூப்பர் சிங்கர் ஷூட்டிங் இருந்தது.
அங்க சென்றிருந்தாலும் கேக் வெட்டி, ஹேப்பி பர்த்டே பாடி கொண்டாடியிருப்போம். அது ஒரு தனி பீலிங்.
கடந்த சில வருடங்களுக்குப் பிறகு எனது வீட்டில், அம்மா, தம்பி உடன் இணைந்து ஒரு நாள் முழுவதும் பிறந்தநாள் கொண்டாடியது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
இன்றைக்கு வீட்டில் இருக்கும் போது இத்தனை பேர் நமக்காக வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள் என்று எனும் போது ரொம்பவே ஹேப்பி.
இதெற்கெல்லாம் நான் தகுதியானவளா? என்றெல்லாம் எனக்கு எண்ணத் தோன்றியது. இதுவரை யாரையுமே பார்க்கவில்லை என்ற வருத்தம் இருந்தது.
ஆனால், அனைவருமே நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது கொஞ்சம் சந்தோஷம் தான். அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.