Vettaiyaadu Vilaiyaadu 2; கமலின் வேட்டையாடு விளையாடு 2 உறுதி: கௌதம் மேனன்! கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வேட்டையாடு விளையாடு 2 உருவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்த படம் வேட்டையாடு விளையாடு.
ஜோதிகா, கமாலினி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். ஹாரிஷ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இவரது இசையில், வந்த பார்த்த முதல் நாளே பாடல் இன்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு சிலரது மொபைல் காலர் டியூனாகவும் இருக்கிறது.
இந்த நிலையில், வேட்டையாடு விளையாடு 2 உருவாக இருப்பதாக தகவல் வந்தது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.
இந்த நிலையில், கமல் ஹாசன் சந்தித்து பேசிய கௌதம் மேனன் வேட்டையாடு விளையாடு 2 குறித்து விவாதிக்கவும் செய்துள்ளாராம்.
ஏப்ரல் மாதம் வேட்டையாடு விளையாடு 2 படத்தின் இறுதிகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று கௌதம் மேனன் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதோடு, முதல் பாகத்தில் கமலுக்கு எப்படி அறிமுக காட்சிக்கு வரவேற்பு கிடைத்ததோ, அதே போன்று வேட்டையாடு விளையாடு 2 படத்திலும் ஒரு மாஸான காட்சி இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். இதன் மூலம் வேட்டையாடு விளையாடு 2 படம் உறுதியாகியுள்ளது.
தற்போது கமல் ஹாசன் இந்தியன் 2 படத்தில் பிஸியாக இருக்கிறார். கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆதலால், வேட்டையாடு விளையாடு 2 உருவாக இன்னும் 3 மாதங்களுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், பிக் பாஸ் சீசன் 4 வேறு வருகிறது. இந்நிகழ்ச்சியை கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.