Aishwarya Rai Bachchan; கொரோனா தாக்கம் அதிகம்: ஐஸ்வர்யா ராய், ஆராத்யா மருத்துவமனையில் அனுமதி! அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இந்தியா 3 ஆவது இடத்தில் இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்m நிலையில், மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 11 ஆம் தேதி அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், ஆராத்யா மற்றும் ஜெயா பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கு லேசான அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். ஜெயா பச்சனுக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்தது.
இந்த நிலையில், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, கொரோனா அறிகுறி அதிகரித்துள்ளது.
இதையடுத்து, இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனவர். ஏற்கனவே அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கரண் ஜோகர், அமீர் கான், போனி கபூர், ஸ்ரத்தா கபூர் ஆகியோர் தங்களது வீட்டு ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.