Home சினிமா கோலிவுட் சியான் நடிக்கும் புதிய படம்: வாய்ப்பை கோட்டை விட்ட ஸ்ருதி, அக்‌ஷரா ஹாசன்!

சியான் நடிக்கும் புதிய படம்: வாய்ப்பை கோட்டை விட்ட ஸ்ருதி, அக்‌ஷரா ஹாசன்!

276
0
Shruti Haasan Dont Breathe

Don’t Breathe Tamil Remake; சியான் நடிக்கும் புதிய படம்: வாய்ப்பை கோட்டை விட்ட ஸ்ருதி, அக்‌ஷரா ஹாசன்! விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடிக்க போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கும் Don’t Breathe என்ற ஹாலிவுட் படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடாரம் கொண்டான் படத்தைத் தொடர்ந்து சியான் விக்ரம் கோப்ரா, துருவ நட்சத்திரம், மஹாவீர் கர்ணா, பொன்னியின் செல்வன் மற்றும் சியான் 60 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கும் Don’t Breathe என்ற ஹாலிவுட் படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை இரு முகன் படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் ஃபெடி அல்வரேஸ் இயக்கத்தில் வெளியான படம் Don’t Breathe. த்ரில்லர் கதையை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் உலக அளவில் மாபெரும் வெற்றியை ருசித்தது.

இந்த நிலையில், இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று அறிவித்திருந்தது.

அதோடு, இந்தப் படத்தை விக்ரம் நடிக்க இருப்பதாகவும், அதுவும் பார்வையற்ற ஹீரோ என்ற ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், இந்தப் படம் தொடங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், சியான் விக்ரம் தனது அடுத்தடுத்த படங்களில் பிஸியாகிவிட்டார்.

ஆதலால், Don’t Breathe என்ற ஹாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில், Don’t Breathe என்ற ஹாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் சியான் விக்ரம் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும், இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், தயாரிப்பு  தரப்பிடமிருந்து இதுவரை ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகியோரிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லையாம்.

அதோடு, ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதியின் லாபம் படத்தைத் தவிர வேறு எந்தப் படத்திலும் கமிட்டாகவில்லை.

இதற்கு முன்னதாக கடாரம் கொண்டான் படத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்திருந்தார். தற்போது உருவாக இருக்கும் ஹாலிவுட் படத்தில் இவர்களுக்கு தயாரிப்பு நிர்வாகம் வாய்ப்பளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Previous articleகொரோனா தாக்கம் அதிகம்: ஐஸ்வர்யா ராய், ஆராத்யா மருத்துவமனையில் அனுமதி!
Next articleஆடும் போது வழுக்கி விழுந்த லட்சுமி மேனன்: வைரலாகும் வீடியோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here