Home சினிமா கோலிவுட் ஸ்மார்ட்டான தோற்றத்தில் தளபதி விஜய்: வைரலாகும் அந்த கண்ண பாத்தாக்கா லிரிக் வீடியோ!

ஸ்மார்ட்டான தோற்றத்தில் தளபதி விஜய்: வைரலாகும் அந்த கண்ண பாத்தாக்கா லிரிக் வீடியோ!

472
0
Andha Kanna Paathaakaa Song Lyric

Andha Kanna Paathaakaa Song Lyric; ஸ்மார்ட்டான தோற்றத்தில் தளபதி விஜய்: வைரலாகும் அந்த கண்ண பாத்தாக்கா லிரிக் வீடியோ! அந்த கண்ண பாத்தாக்கா பாடல் லிரிக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படத்தின் அந்த கண்ண பாத்தாக்கா பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் மாஸ்டர். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆனால், கொரோனா எதிரொலி காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள 8 பாடல்கள் வெளியிடப்பட்டது.

ஆனால், படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் கூறியிருந்தார்.

மாஸ்டர் இசை வெளியீட்டுக்கு முன்னதாக மாஸ்டர் குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ, வாத்தி பாடல் லிரிக் வீடியோ மற்றும் வாத்தி ரெய்டு பாடல் லிரிக் வீடியோ என்று அடுத்தடுத்து பாடல்கள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள அந்த கண்ண பாத்தாக்கா என்ற பாடலின் லிரிக் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா தனது சொந்தக் குரலில் இந்தப் பாடலை பாடியுள்ளார்.

இதற்கு முன்னதாக புதிய கீதை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அந்த கண்ண பாத்தாக்கா என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியாக இருந்த நிலையில், இந்தியா முழுவதும் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக மாஸ்டர் டிரைலர் நேற்று வெளியாகவில்லை.

அதற்கு பதிலாக தற்போது அந்த கண்ண பாத்தாக்கா என்ற பாடல் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் பாடலில், மாளவிகா மோகனன் மற்றும் விஜய் இருவரது ரொமான்ஸ் காட்சி இடம்பெற்றுள்ளது. அதோடு, விஜய் தாடி இல்லாமல் ஸ்மார்ட்டாக இளமையான தோற்றத்தில் நடித்துள்ளார் என்று பாடலை பார்த்தாலே தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleTamil Cinema: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட 1992!
Next articleவங்கதேச வெற்றியை ஒரு ரன்னில் பறித்த இந்தியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here