Home சினிமா கோலிவுட் Tamil Cinema: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட 1992!

Tamil Cinema: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட 1992!

0
679
Tamil Cinema 1992

Tamil Cinema 1992: தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட 1992! தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும், ஏதாவது ஒரு மறக்க முடியாத நிகழ்வு நடந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில், Tamil cinema 1992-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நிகழ்ந்த மாறுதல் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

கடந்த 1992-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட பல நிகழ்வுகள் நடந்துள்ளது. அது, மாஸ் ஹீரோக்களுக்கு மறக்க முடியாத வகையில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. அது படங்களின் வசூல், பிரபலங்களின் திருமணம், வருமான வரித்துறை சோதனை, பிரபலங்களின் விபத்து, இறப்பு…இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில், Tamil Cinema 1992-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் என்ன நடந்தது? ஏன் தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட 1992 என்று சொல்கிறார்கள்? என்பது குறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம்.

ஒரே வருடத்தில், இப்போது இருக்கும் விஜயகாந்த், சரத்குமார், கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜய் என்று மாஸ் நடிகர்களுக்கு சினிமா வாழ்க்கையை மாற்றியமைத்த ஆண்டாக கருதப்படுகிறது. அது என்னென்ன படங்கள் என்று இங்கு பார்க்கலாம்.

சின்ன கவுண்டர்

கடந்த 1992-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி திரைக்கு வந்த படம் சின்ன கவுண்டர். ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த், மனோரமா, சுகன்யா, கவுண்டமனி, செந்தில் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்திற்கு முன்பாக விஜயகாந்த் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், எல்லாமே ஆக்‌ஷன் படங்களாகவே அமைந்தது.

ஆனால், சின்ன கவுண்டர் படம் முழுக்க முழுக்க கிராம மக்கள் மரியாதை கொடுப்பதும், தப்பு, தவறு நடந்தால் பஞ்சாயத்து மூலம் தீர்ப்பு சொல்வதும் என்று எல்லாமே விஜயகாந்திற்கு கிடைத்த பெருமை. இந்தப் படத்தில் பெரிய அளவில் சண்டைக் காட்சி இடம் பெற வில்லை.

விஜய்காந்த் அரசியல்

கடந்த 2004 ஆம் ஆண்டு விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு சின்ன கவுண்டர் படம் அவருக்கு பக்க பலமாக, பாலமாக அமைந்தது.

சின்ன கவுண்டர் பம்பரம்

சின்ன கவுண்டர் படத்தில் ஒரு முக்கியமான காட்சியும் இடம்பெற்றிருந்தது. அது என்னவென்றால், நடிகை சுகன்யா தொப்புள் (Sunganya Navel) பகுதியில் வயிற்றில் பம்பரம் சுற்றுவதுதான்.

இதன் கட்சிக்கு பிறகு அந்த பம்பரத்திற்கு பெயரே சின்ன கவுண்டர் பம்பரம் என மாறிப்போனது. பம்பரத்திற்கும் அப்படியொரு மவுசு இருந்தது.

இந்தக் காட்சி ஏன் படத்தில் இருந்தது, சுகன்யா ஏன் பம்பரக் காட்சியில் நடித்தார் என்பதெல்லாம் கேள்விக்குறிதான்?

சரத்குமார் – சூரியன்

இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பாக சரத்குமார் ஒரு துணை நடிகர், வில்லன் கதாப்பாத்திரங்களில் தான் நடித்திருந்தார்.

தேசிய கமாண்டாவாக நடித்திருந்த சரத்குமார் மீது தீவிரவாதி என்ற பழி சுமத்த அங்கிருந்து வேறொரு கிராமத்திற்கு சென்று மக்களோடு மக்களாக வாழ்கிறார்.

மொட்டை

இந்தப் படத்திற்காக நிஜமாகவே மொட்டை அடித்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு படத்திற்காக சரத்குமார் மொட்டை அடித்த விஷயம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்தப் படத்தில் மனோரமா, கவுண்டமனி, ரோஜா ஆகியோர் நடித்திருந்தனர்.

கவுண்டமனி காமெடி

இந்தப் படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ஆம், அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா, இங்க பூசு, அங்க பூசு, ரைட்ல பூசு, லெப்ட்ல பூசு போன்ற காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அசோஸியேட் டைரக்டர் ஷங்கர்

இப்படத்தின் டைட்டிலில் அசோஸியேட் டைரக்டர் ஷங்கர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அது வேறு யாமில்லை. இப்போது பிரமாண்ட இயக்குநராக பார்க்கப்படும் இயக்குநர் ஷங்கர் தான்.

இந்தப் படம் தான் சரத்குமார் அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றது. பேரும் புகழும் கிடைத்தது.

ரோஜா : மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான்

கடந்த 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரைக்கு வந்த படம் ரோஜா. இப்படத்தை இயக்கியது இயக்குநர் மணி ரத்னம். இசை, ஏஆர் ரஹ்மான்.

தமிழகத்தில் ஒரு இயக்குநராக மணி ரத்னம் என்பவரை அனைவருக்கும் தெரியும். ரோஜா ஹிந்தியில் டப் செய்யப்பட்ட பிறகு இந்திய அளவில் ரஹ்மான்-மணிரத்னம் புகழ் ஒலித்தது.

தேசப்பற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தின் பாடல் கேசட் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

கமல் ஹாசன் – தேவர் மகன்

1992-ஆம் ஆண்டு கமல் ஹாசனுக்கு சினிமா வாழ்க்கையை மாற்றிய படமாக இருந்தது தேவர் மகன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரேவதி, வடிவேலு, கௌதமி, நாசர் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு இசை நம்ம இசைஞானி இளையராஜா தான். படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் இஞ்சி இடுப்பழகி பட்டி தொட்டியெங்கும் பரவியது. இன்றும் பேசப்பட்டு பாடப்பட்டு வருகிறது.

தேவர் மகன் என்று டைட்டில் வைத்ததற்கு பல இடங்களில் கலவரம் வெடித்தது. படமும் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. கிட்டத்தட்ட 200 நாட்கள் ஓடி வெற்றிகண்ட படமாக தேவர் மகன் திகழ்கிறது.

தமிழகத்தில் சிறந்த 10 படங்கள் எது என்ற பட்டியலில் தேவர் மகன் படமும் ஒன்றாக இருக்கும்.

இந்த படத்தில் கமல்-நாசர் நேருக்கு நேர் பார்க்கும் படம் தான் பாகுபலி, விக்ரம் வேதா, மாஸ்டர் போன்ற பல படங்களின் போஸ்டருக்கு இன்ஸ்பிரேஷன்.

ரஜினிகாந்த் – அண்ணாமலை

ரஜினிக்கு வாழ்க்கையை மாற்றிய படம் எது என்றால், அது அண்ணாமலைதான். இந்தப் படத்தில் குஷ்பு, மனோரமா, ஜனகராஜ், சரத்பாபு ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு டயலாக், அசோக் உன்னோட காலண்டரில் குறித்து வைத்துக் கொள்…இந்த நாள் என்ற டயலாக் இன்றும் இளைஞர்கள் மத்தியில் பேசப்படும் ஒரு வசனம்.

இந்த படத்தில் அசோக் கதாபாத்திரம் சீட்டில் இருந்து எழுந்து நிற்க, ரஜினி உட்காரும் காட்சி இடம் பெரும். இது நேரடியாகவே ஜெ.வை குறித்து வைக்கப்பட்டது.

ரஜினி – ஜெயலலிதா சச்சரவு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும் ரஜினிக்கும் இடையில் இருந்த சச்சரவு, இந்த படத்தின் போது பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.

இந்தப் படமும் பல இடங்களில் 150 நாட்களுக்கு மேலாக ஓடியுள்ளது. இப்படத்திற்கு இசை தேவா தான். வந்தேண்டா பாலுக்காரன், அண்ணாமலை ஆகிய பாடல்கள் சூப்பர்ஹிட் பாடல்களாக அமைந்துள்ளது.

தளபதி விஜய் – நாளைய தீர்ப்பு

தற்பொழுது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக இருப்பது தளபதி விஜய். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜய்.

1992-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படத்தில் கீர்த்தனா, ஈஸ்வரி ராவ், ஸ்ரீவித்யா, ராதா ரவி, வினுசக்ரவர்த்தி, கே ஆர் விஜயா, சரத்பாபு ஆகியோர் உள்பட பலர் நடித்திருந்தனர்.

இப்படி பல திருப்பு முனைகளை கொண்டு வந்து நடிகர்களை உச்சம் தொட வைத்த வருடமாக 1992 அமைந்துள்ளது. ஆதலால், தான் தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட வருடமாக 1992 கருதப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here