Home சினிமா கோலிவுட் அந்தகாரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

அந்தகாரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

377
0
Andhaghaaram First Look

Andhaghaaram First Look; அந்தகாரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! அட்லீ தயாரிக்கும் அந்தகாரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தகாரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அட்லீ தயாரிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அட்லீ தயாரிப்பில் வில்லன் நடிகர் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

பிரமாண்ட இயக்குநர் என்று போற்றப்படும் ஷங்கர் இயக்கத்தில் வந்த எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் அட்லீ.

இவர், ஆர்யா, நயன்தாரா, ஜெய் ஆகியோரது நடிப்பில் வந்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே குறிப்பாக காதலர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கினார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

இதைத் தொடர்ந்து மெர்சல், பிகில் என்று அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கினார். இதன் காரணமாக ஏ ஃபார் ஆப்பிள் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். ஜீவா நடித்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை தயாரித்தார்.

இந்த நிலையில், அடுத்ததாக அட்லீ தயாரிக்கும் படம் குறித்து முக்கிய அப்டேட் வந்துள்ளது. அதன்படி, அட்லியின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் 2ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது என்று அறிக்கப்பட்டது.

இதற்கான அறிவிப்பு வெளியிட்ட போது போஸ்டரில் ஒரு மங்கலான முகம் தெரிந்தது. அந்த முகம் யார் என்று உற்றுப் பார்த்தால் கைதி படத்தில் வில்லனாக வந்த அர்ஜூன் தாஸ். இவர், மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது அட்லீ தயாரிக்கும் புதிய படத்தில் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் அட்லீ தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதன்படி படத்திற்கு அந்தகாரம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் விக்னராஜன் இயக்குகிறார். அந்தகாரம் படத்தின் டிரைலர் வரும் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தகாரம் போஸ்டர் தூரத்தில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருப்பது போன்றும் புத்தகம் அருகில் வைக்கப்பட்டிருப்பது போன்றும், பழைய வீடு போன்றும் தெரிகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleVaisakhi Festival: சீக்கியர்களின் வைசாகி திருவிழா இன்று
Next articleகுயில புடிச்சி கூண்டிலடச்சி பாடச்சொல்லுகிற உலகம்: சின்னத்தம்பி வந்து 29 வருசம் ஆச்சு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here