Vaisakhi Festival: வைசாகி தினம் என்றால் என்ன? எவ்வாறு வைசாகி திருவிழா கொண்டாடப்படுகிறது? அமிர்தசரஸ் பொற்கோயிலில் இன்றைய வழிபாடுகள் என்ன?
நமது இந்திய நாட்டில் கலாச்சார அடிப்படையில் எண்ணற்ற திருவிழாக்கள் நாடு முழுதும் பல மாதங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய மற்றும் இந்துக்களால் கொண்டாடப்படும் திருவிழாவில் ஒன்றான வைசாகி திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.
வைசாகி திருவிழா (Vaisakhi Festival)
வைசாகி அல்லது பைசாகி திருவிழாவானது பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களின் வருடப் பிறப்பாகவும் (Panjabi new year) மற்றும் இளவேனிற்கால அறுவடை தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
மேலும் 1699-ஆம் ஆண்டு குரு கோவிந்த் சிங் கால்சா படையினை உருவாக்கியதும் இந்த நாளில் தான் என்பதால் சீக்கிய மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுகின்றனர்.
இந்த திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 13 அல்லது 14 தேதியில் எப்பொழுதும் கொண்டாடப்படுகிறது.
இந்த புதுவருட பிறப்பு திருவிழானது இந்தியா மட்டுமின்றி பாக்கிஸ்தான், கனடா, அமெரிக்கா, லண்டன் மற்றும் மலேசியாவில் வாழும் சீக்கியர்களாலும் அந்நாட்டு அரசும் சேர்ந்து கொண்டாடுகின்றனர்.
புதுவருட அறுவடை திருநாள்
வைசாகி தினமானது அறுவடை திருவிழாவாகவும் கொண்டாடுகின்றனர். இளவேனிற்கால அறுவடையை துவங்கும் நாளாகும்.
இத்தினத்தில் உழவர்கள் தாங்கள் விளைவித்த கோதுமை தானியங்களை அறுவடை செய்ய துவங்குகின்றனர். அறுவடை செய்த புதிய பொருட்களை வைத்து உணவு சமைத்து பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்துகளின் வைசாகி தினம்
வைசாகித்திருவிழாவானது இந்துகளாலும் கொண்டாடப்படுகிறது. பஞ்சாபில் வாழும் இந்துகளால் வானியல் அடிப்படையில் இத்தினமானது புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.
இத்தினத்தில் புண்ணிய நதிகளில் புனித நீராடி தங்களின் நிலத்தில் விளைந்த பயிர்களை அறுவடை செய்து விற்கவும் துவங்குகின்றனர்.
இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக புதிய தானியங்களை வைத்து பூஜைகளை செய்கின்றனர்.
அமிர்தசரஸில் வைசாகி திருவிழா
சீக்கியர்களின் புனித தலமாக கூறப்படும் அமிர்தசரஸ் பொற்கோவிலில் இந்த தினத்தை விமர்சியாக கொண்டாடுகின்றனர்.
அதிகாலை முதலே பக்தர்களின் கூட்டம் நிரம்ப துவங்கிவிடுகிறது. அனைவரும் கங்கையில் புனித நீராடி பொற்கோவில் சென்று குருமார்களின் ஆசியினை பெற்று செல்கின்றனர்.
அவரவர் இல்லத்தில் பூஜைகள் செய்கின்றனர். உணவு மற்றும் இனிப்பு பதார்த்தங்களை செய்து உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
பொற்கோவிலில் நாள் முழுவதும் பஜனைகள், சங்கீர்தனங்கள், சிறப்பு பூஜைகள், சீக்கியர்களின் அணிவகுப்பு ஊர்வலம், புதிதாக சேரும் கால்சா படையினருக்கு ஞான ஸ்நானம் மற்றும் குழந்தைகளுக்கான கண்காட்சிகள் நடத்தப்படுகின்றது.
2020-இல் வைசாகி திருவிழா
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதியான இன்று வைசாகித்திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு ஊரடங்கு பிரச்சனையால் வெளியே கோவில் சென்றோ, புனித நீராடியோ கொண்டாட இயலாது. எனவே அனைவரும் இன்று வீட்டில் இருந்தபடியே இந்த தினத்தில் இன்னல்கள் தீர பிராத்தனை செய்வோம்.