Home சினிமா கோலிவுட் ரஜினி தீம் மியூசிக் உடன் கேப்டன் கூல் MSD வாழ்த்து சொன்ன அனிருத்: வைரலாகும் வீடியோ!

ரஜினி தீம் மியூசிக் உடன் கேப்டன் கூல் MSD வாழ்த்து சொன்ன அனிருத்: வைரலாகும் வீடியோ!

0
307
HBD MSD

MS Dhoni Birthday Petta Theme Music; ரஜினி தீம் மியூசிக் உடன் கேப்டன் கூல் MSD வாழ்த்து சொன்ன அனிருத்: வைரலாகும் வீடியோ! ரஜினிகாந்த் தீம் மீயூசிக் போட்டு கேப்டன் கூல் MSD என்ற மகேந்திர சிங் தோனிக்கு இசையமைப்பாளர் அனிருத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனிக்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் தனது ஸ்டைலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான கேப்டன் கூல் எம் எஸ் தோனி இன்று தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கிரிக்கெட் ஜாம்பவான்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரும் கேப்டன் கூல்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இளம் இசையமைப்பாளர் அனிருத் தனக்கே உரிய பாணியில் MSDக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எப்போதும், ரஜினிக்கு போடும் சூப்பர்ஸ்டார் தீம் மியூக் போட்டு MSDக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

ஆம், பேட்ட படத்தில் வரும் மரணம் மாஸ் மரணம் என்ற பாடலின் தீம் மியூசிக் போட்டு தல தோனி ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உடை அணிந்து நடந்து வருவது போன்றும், கேப்டன் கூல் MSD என்று கூறுவது போன்றும் அந்த வீடியோ அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஹேப்பி பர்த்டே அன்பே நம்பர் 7 என்று குறிப்பிட்டுள்ளார். ஆம், கிரிக்கெட்டில் தோனி அணிந்திருக்கும் ஜெர்ஸியின் நம்பர் 7. அதனை குறிப்பிட்டு தோனிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here