Home சினிமா கோலிவுட் SKவை பாராட்டிய Deputy கமிஷனர்: நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்!

SKவை பாராட்டிய Deputy கமிஷனர்: நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்!

268
0
Sivakarthikeyan

Sivakarthikeyan; SKவை பாராட்டிய Deputy கமிஷனர்: நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்! புகைப்பிடிப்பதும் இல்லை, குடிப்பதும் இல்லை என்று கூறிய சிவகார்த்திகேயனின் வீடியோவை பதிவிட்டு Deputy கமிஷனர் அர்ஜூன் சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனை Deputy கமிஷனர் அர்ஜூன் சரவணன் வெகுவாக பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சி மூலமாக பிரபலமான சிவார்த்திகேயன் தற்போது நம்ம வீட்டு பிள்ளையாக வளர்ந்து நிற்கிறார்.

அண்மையில், மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப்பிள்ளை, ஹீரோ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. தற்போது அயலான், டாக்டர் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில், குடிப்பழக்கம், புகைப்பழக்கம் குறித்து சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டு திருநெல்வேலி மாவட்ட Deputy கமிஷனர் அர்ஜுன் சரவணன் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: நட்சத்திரங்கள் சொல்வதை அப்படியே கேட்பவர்கள் என்றால் இதனையும் கொஞ்சம் கேளுங்க.

குடிக்க , புகைக்க எந்த நண்பனும் அழைக்க மாட்டான், அப்படி அழைப்பவர் நட்பிலிருந்து வெளியேறுங்கள். அவன் உங்களை உலகிலிருந்து வெளியேற அழைக்கிறான் என்று பதிவிட்டு, நன்றி சிவகார்த்திகேயன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை ரீடுவிட் செய்த சிவகார்த்திகேயன் சரியாக சொன்னீர்கள் சார். உங்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleரஜினி தீம் மியூசிக் உடன் கேப்டன் கூல் MSD வாழ்த்து சொன்ன அனிருத்: வைரலாகும் வீடியோ!
Next articleடுவிட்டரில் டிரெண்டாகும் Makkal Selvan ஹேஷ்டேக்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here