Pavalar Maindhan Passed Away; இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் காலமானார்! இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் மகனும் இயக்குனருமான ஹோமோ ஜோ நேற்று காலமானார்.
இசைஞானி இளையராஜாவிற்கு இரு சகோதரர்கள். அவர்கள் கங்கை அமரன் மற்றும் பாவலர் வரதராஜன். இதில், கங்கை அமரனின் மகன்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோரை அனைவருக்கும் தெரியும்.
ஆனால், பாவலர் வரதராஜனின் மகன் பாவலர் மைந்தனை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர், ஹோமோ ஜோ என்றும் அழைக்கப்படுகிறார். இவர், உடல்நிலை காரணமாக நேற்று காலமானார்.
ஜோ, கிழக்கு வாசல், சிங்கார வேலன், சின்ன கவுண்டர் என்று பல படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இயக்குநர் ஆர்வி உதயகுமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். தற்போது நாலு பேரும் ரொம்ப நல்லவங்க என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.