Home சினிமா கோலிவுட் ரூ.45 லட்சம் முறைகேடு: கணக்காளர் ரம்யா அதிரடி நீக்கம் – அறிக்கை!

ரூ.45 லட்சம் முறைகேடு: கணக்காளர் ரம்யா அதிரடி நீக்கம் – அறிக்கை!

245
0
Vishal Film Factory

Vishal Film Factory; ரூ.45 லட்சம் முறைகேடு: கணக்காளர் ரம்யா அதிரடி நீக்கம் – அறிக்கை! விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தில் ரூ.45 லட்சம் முறைகேடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கணக்காளர் ரம்யா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கணக்காளர் பொறுப்பிலிருந்து ரம்யா நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இனி இல்லை என்று கூறி விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். இவர், விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் என்று சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றிய ரம்யா ரூ.45 லட்சம் முறைகேடு செய்ததாக, அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, விருகம்பாக்கம் போலீசார் அவர் மீது மோசடி புகாரின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், “எங்கள் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்த ரம்யா, நிறுவனத்தில் பல வருடங்களாக வங்கிக் கணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி ரூ.45 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் என்பதை கண்டறியப்பட்டு 30.06.2020 அன்று காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் 7-07-2020 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.

எனவே ரம்யா இனி எங்கள் நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியில் பணியாற்றவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

விஷால் ஃபிலிம் பேக்டரி கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் இனிமேல் ரம்யாவை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் மீறி தொடர்பு வைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்”என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் காலமானார்!
Next articleநடிப்பு, டான்ஸ், குரல் வளம் கொண்ட ஹீரோ விஜய்: இசையமைப்பாளர் தேவா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here