Home சினிமா கோலிவுட் நடிப்பு, டான்ஸ், குரல் வளம் கொண்ட ஹீரோ விஜய்: இசையமைப்பாளர் தேவா!

நடிப்பு, டான்ஸ், குரல் வளம் கொண்ட ஹீரோ விஜய்: இசையமைப்பாளர் தேவா!

266
0
Thalapathy Vijay Movie Songs

Vijay Movie Songs; நடிப்பு, டான்ஸ், குரல் வளம் கொண்ட ஹீரோ விஜய்: இசையமைப்பாளர் தேவா! தளபதி விஜய், நடிப்பு, நடனம், குரல் வளம் என்று மூன்று அம்சங்களும் முகுந்த ஹீரோவாக இருக்கிறார் என்று இசையமைப்பாளர் தேவா பெருமையாக கூறியுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பு, டான்ஸ், பாடகர் என்று மூன்று அம்சங்களும் கொண்டவராக இருக்கிறார் என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோருக்கு அடுத்த வரிசையில், அதிக படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தளபதி விஜய். மாஸ்டர் படம் உள்பட இதுவரை 64 படங்களில் நடித்து முடித்துள்ளார்.

கொரோனா காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டதும், மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ கூறியிருந்தார்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் தேவா, விஜய் பற்றியும், அவரை பாட வைத்தது குறித்தும் பெருமையாக கூறியுள்ளார். விஜய் ஹீரோவாக நடித்த 15 படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார்.

தளபதி விஜய் நடித்த ரசிகன் படத்தில் அவரை சொந்தக் குரலில் பாட வைத்த பெருமை தேவாவிற்கு உண்டு. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

விஜய் ஒரு மாஸ் ஹீரோ. அவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னரே அவரை எனக்கு நன்கு தெரியும். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் நிறைய படங்களில் நான் பணியாற்றியிருக்கிறேன்.

அவருடன் விஜய் எனது இசை கூடத்திற்கு (Music Composing) வருவார். ஒரு ஓரமாக அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பார்.

யாருடனும் பேசவே மாட்டார். ஆனால், எப்படி எல்லாம் கம்போசிங் செய்கிறார்கள் என்பதை மட்டும் கூர்ந்து கவனிப்பார்.

அவரை கண்டு நான் பிரமித்துப் போனேன். அதன் பிறகு அவரை ரசிகன் படத்தில் பாட வைப்பதற்கு ஆசைப்பட்டேன். விஜய் முதலில் சம்மதம் தெரிவிக்கவில்லை. அவர் பயந்தார். அதன் பிறகு பயப்படாமல் பாடுங்கள் என்றேன்.

அதன் பிறகு அவர் பாடினார். அவர் பாடிய பாடல் தான் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி… இந்தப் பாடலை விஜய் உடன் இணைந்து கேஎஸ் சித்ராவும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பு, நடனம், குரல் வளம் இந்த மூன்று அம்சங்களும் மிக்க ஹீரோ விஜய் என்று தேவா பெருமையாக கூறியுள்ளார்.

Previous articleரூ.45 லட்சம் முறைகேடு: கணக்காளர் ரம்யா அதிரடி நீக்கம் – அறிக்கை!
Next articleசியான் விக்ரம் இயக்குநரின் அடுத்த அறிவிப்பு தர்ம ராஜ்ய!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here