Techofes 2020 Awards: அட்லி சிறந்த இயக்குநர், அட்லீ விஜய் காம்போ, வருமானவரி சோதனை, ஷாருக்கான் அட்லீ காம்பினேஷன்
பிகில் படத்திற்காக 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநர் விருது அட்லிக்கு வழங்கப்பட்டுள்ளது. கிண்டியில் நடந்த டெகோஃபெஸ் 2020 விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் அட்லி. பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா ஆகியோர் நடிப்பில் வந்த ராஜா ராணி படத்தின் மூலம் தன்னை சிறந்த இயக்குநராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அட்லீ விஜய் காம்போ
இந்தப் படத்தைத் தொடர்ந்து, தளபதி விஜய் நடித்த தெறி படத்தை இயக்கினார். இதில், எமி ஜாக்சன், சமந்தா, ராதிகா, பேபி நைனிகா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து, மீண்டும் விஜய்யை வைத்து மெர்சல் படத்தை இயக்கினார். இதில், விஜய் 3 விதமான கதபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன், வடிவேலு, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெறி, மெர்சல் ஆகிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 3ஆவது முறையாக விஜய்யின் பிகில் படத்தை இயக்கினார். இப்படம் கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்து சர்ச்சையில் சிக்கியது.
வருமான வரி சோதனை
வருமான வரித்துறை விஜய், பைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்று பல இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில், பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டில் கணக்கில் வராத ரூ.77 கோடியை பறிமுதல் செய்தனர். மேலும், பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதன் மதிப்பு எல்லாம் ரூ.300 கோடிக்கும் அதிகமாகவே இருக்கும் என்று வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
Techofes 2020 Awards
இந்த நிலையில், கிண்டியில் நடந்த டெகோஃபெஸ் 2020 நிகழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் அட்லி ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பிகில் படத்திற்காக 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநர் விருது அட்லிக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான் அட்லி காம்பினேசன்
ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அட்லி பாலிவுட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஷாருக்கானை வைத்து சங்கி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குநரைத் தொடர்ந்து தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ஆம், சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தை தயாரித்துள்ளார்.