Home சினிமா கோலிவுட் மதுரையில் தனுஷின் Atrangi Re படத்தின் படப்பிடிப்பு!

மதுரையில் தனுஷின் Atrangi Re படத்தின் படப்பிடிப்பு!

275
0
Atrangi Re Movie Shooting

Atrangi Re Movie Shooting; மதுரையில் தனுஷின் Atrangi Re படத்தின் படப்பிடிப்பு! தனுஷ் நடிக்கும் பாலிவுட் படமான Atrangi Re படத்தின் படப்பிடிப்பை மதுரையில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மதுரையில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் Atrangi Re படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமான தனுஷ் தமிழைத் தவிர மற்ற மொழிப் படங்களில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

ஏற்கனவே பாலிவுட்டில் ராஞ்சனா, சமிதாப் ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார். தற்போது 3ஆவது முறையாக Atrangi Re என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், தனுஷ் உடன் இணைந்து அக்‌ஷய் குமார், சாரா அலிகான், நிம்ரத் கௌர், முகமது ஷீசான் ஆயுப் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தான் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், இந்தப் படம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் அக்டோபர் மாதம் மதுரையில், Atrangi Re என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, டெல்லி மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் அக்‌ஷய் குமாரை வைத்து படப்பிடிப்பு நடத்தவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கர்ணன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று அவரது 37ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது: கர்ணன் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு!
Next articleமுறுக்கு மீசையில் கலக்கிய தனுஷ்: ரகிட ரகிட ரகிட லிரிக் வீடியோ வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here