Bala Saravanan; கொரோனாவை விட கொடுமையானவன் மனிதன்! கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தம்மை தாமே பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அனைவரையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்று மருத்துவர்களும், அரசு அதிகாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக அதிகளவில் விற்பனை செய்யப்படுவது சானிடைசர். கோவிட்19 மனிதர்கள் மூலம் எளிதில் பரவக்கூடிய ஒருவகை வைரஸ் கிருமி.
உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.
நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும், அரசு அதிகாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
தொடுதல் மூலமாகவே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா வைரஸ் பரவும் என்பதால், அடிக்கடி கைகளை கழுவுதலும் சானிடைசர்களை பயன்படுத்துவதும் அவசியம்.
ஆனால், இதுதான் சரியான நேரம் என்று சானிடைசர்களை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் கடைக்காரர்கள். அதையும் வாங்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இது குறித்து நடிகர் பாலசரவணன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் என்ன கூறியிருக்கிறார் என்பதை இங்கு பார்ப்போம்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு சானிடைசர் தீர்ந்து விட்ட நிலையில், கடைக்கு சானிடைசர் வாங்க சென்றேன். அப்போது 60 ரூபா மதிப்புள்ள சானிடைசரை ரூ.135க்கு விற்பனை செய்தார்கள்.
MRP ல வெறும் 60 மட்டுமே போட்டிருக்கும் நிலையில், நீங்கள் எப்படி ரூ.135 கேட்கலாம் என்று நான் கேட்க, அதற்கு பில்லிங் பிரிவில் இருப்பவர் சார் நான் இங்கு வேலை செய்கிறேன். என்னால் என்ன செய்ய முடியும் என்று பரிதாபமாக கூறினார்.
சரி, என்று நானும் அப்படியே வாங்கிவிட்டு வந்தேன். அதன் பிறகு காஃபி குடிக்க எனது நண்பர்களுடன் சென்றிருந்தேன்.
அப்போது கடையில், காஃபி கொடுக்கும் ஒரு அக்கா எங்களது கையில் சானிடைசர் கொடுத்தார்கள். அப்போது புலம்பிக் கொண்டே இது வெறும் ரூ.75 ஆனால், கடையில் ரூ.115 சொல்கிறார்கள்.
பில்லும் தரமாட்டேன். விருப்பம் இருந்தால் வாங்குங்கள் இல்லையென்றால் இருக்கட்டும் என்கிறார்கள் என்று அந்த அக்கா சொன்னாங்க.
நான் எனக்கும் நடந்தது என்று சொல்லி முடிப்பதற்குள் ஒருவர் மாற்றி ஒருவர் எல்லோருக்குமே இது போன்ற சம்பவம் நடந்தது என்றார்கள்.
பல கடைகளில் ஹேண்ட் வாஷ் மற்றும் சானிடைசர் அதிகளவில் மக்கள் வாங்குவதை அறிந்து கொண்டு அதன் விலையைவிட 2,3 மடங்கு அதிகம் வைத்து விற்பனை செய்கிறார்கள்.
இது போன்ற ஒரு அவசரமான சூழ்நிலையில், தங்களது லாப நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்ள நினைப்பது எவ்வளவு ஒரு கேவலமான விஷயம். உண்மையில் கொரோனாவை விட மிகவும் கொடூரமானவன் மனிதன்.
இந்த ஊரில் இன்னும் எத்தனை வருடமானாலும், ஜாதி ஒழியாது, ஏற்றத்தாழு மாறாது, எந்த மாற்றமும் நிகழபோவதில்லை, ஒரு ஆணியும்….என்று மன வேதனையுடன் தெரிவித்துள்ளார் என்பது மிகவும் வருத்தமளிக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது.