Home சினிமா கோலிவுட் 14 வயது சிறுமியும், நடிகை பானுப்பிரியாவும்: தாய் கதறல்!

14 வயது சிறுமியும், நடிகை பானுப்பிரியாவும்: தாய் கதறல்!

0
536
14 வயது சிறுமியும்

14 வயது சிறுமியும், நடிகை பானுப்பிரியாவும்: தாய் கதறல்!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரபாவதி என்பவர் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் நடிகை  பானுப்பிரியா மீது புகார் கொடுத்துள்ளார்.

பிரபாவதி தன்னுடைய 14 வயதான மகளை குடும்ப வறுமை காரணமாக கடந்த வருடம் நடிகை பானுப்பிரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பியுள்ளார். மாதம் பத்தாயிரம் சம்பளம் எனக்கூறி சிறுமியை வேலையில் சேர்த்துள்ளார் பானுப்பிரியா.

18 மாதங்களாக சிறுமிக்கு சம்பளம் கொடுக்கவில்லை எனவும், பாலியல் ரீதியாக என் மகளை கொடுமை படுத்துகின்றனர் எனவும் பிரபாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபற்றி நியாயம் கேட்டு சில தினங்களுக்கு முன்பு பானுப்பிரியா வீட்டிற்கு சென்றுள்ளார் பிரபாவதி. அங்கு இருந்தவர்கள் பிரபாவதியை மிரட்டியுள்ளனர்.

எங்களிடம் பணபலம் உள்ளது. உன்னால் என்ன முடியுமோ செய்துகொள். நாங்கள் நினைத்தால் உன் மகள் மீது திருட்டுப்பட்டம் கட்டி ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம் எனக் கூறியுள்ளனர்.

இதனால் பிரபாவதி நடிகை பானுப்பிரியா மீதும், அவருடைய அண்ணன் மீதும் போலீசில் புகார் செய்துள்ளார்.

போலீசார் நடிகை பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பானுப்பிரியா சிரியலில் நடிப்பதற்காக சென்னை வந்துள்ளார். இதனால், சென்னைக்கே சென்று பானுப்பிரியாவிடம் விசாரணை செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here