Daniel Annie Pope Blessed With Baby Boy; குழந்தை பிறந்த சந்தோஷத்தில் ஃப்ரண்ட் லவ் மேட்டர் புகழ் டேனியல் அன்னி போப்! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ஃப்ரண்டு லவ் மேட்டரு பீல் ஆயிட்டாப்ல என்ற வசனத்தை பேசும் டேனியல் அன்னி போப்பிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
டேனியல் அன்னி போப் – டெனிஷா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வந்த பொல்லாதவன் படத்தின் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் டேனியல் அன்னி போப். இந்தப் படத்தைத் தொடர்ந்து, பையா, ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,
கவலை வேண்டாம், மாஸ் என்கிற மாசிலாமணி, ரங்கூன், உரு, மரகத நாணயம், திரி, ஆயிரத்தில் இருவர், சக்க போடு போடு ராஜா, காத்தாடி, ஜருகண்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்று பல படங்களில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் வரும் ஃப்ரண்டு லவ் மேட்டரு பீல் ஆயிட்டாப்ல என்ற வசனத்தை பேசி பிரபலமாகியுள்ளார்.
சினிமாவைத் தொடர்ந்து காமெடி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகளவில் பிரபலமானார்.
இந்நிகழ்ச்சியின் போது தனது காதலி டெனிஷாவை அறிமுகப்படுத்திய டேனியல், இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு டெனிஷாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், தற்போது டேனியல் – டெனிஷா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து டேனியில் கூறியிருப்பதாவது:
மிக அருமையான பரிசாக நாங்கள் ஆண் குழந்தையுடன் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, டேனியல் அன்னி போப் மற்றும் டெனிஷா தம்பதியினருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.