Home சினிமா கோலிவுட் அமலா பால் சர்ப்ரைஸ் முத்தம்: வைரலாகும் வீடியோ!

அமலா பால் சர்ப்ரைஸ் முத்தம்: வைரலாகும் வீடியோ!

357
0
Amala Paul Kiss Video

Amala Paul Kiss Video; அமலா பால் சர்ப்ரைஸ் முத்தம்: வைரலாகும் வீடியோ! நடிகை அமலா பால் தன் ரசிகருக்கு சர்ப்ரைஸ் முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகருக்கு முத்தம் கொடுத்த அமலா பாலின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலா பால். வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா, தெய்வ திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, விஐபி 2, ராட்சசன், ஆடை என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம், கேடவர், லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் அமலா பால், தனது அன்றாட பணிகளை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், ரசிகர் ஒருவருக்கு பச்சக் என்று முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது சிறந்த நடிகை அமலா பால் என்று ரசிகர் பேசிக் கொண்டிருக்கும் போது அவரே எதிர்பாராத வகையில், அவருக்கு சர்ப்ரைஸ் முத்தம் ஒன்றை அவரது கன்னத்தில் கொடுத்துள்ளார்.

ஆனால், அது எப்போது எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரியவில்லை. காரணம், அந்த ரசிகர் அமலா பால் உடன் இணைந்து விஐபி 2 படம் பார்க்க இருப்பதாக கூறுவது போன்று அந்த வீடியோ இருக்கிறது.

அமலா பால் சர்ப்ரைஸ் முத்தம் கொடுத்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here