Disha Salian Suicide; ஐஸ்வர்யா ராயின் முன்னாள் மேனேஜர் தற்கொலை: அதிர்ச்சியில் பாலிவுட்! பாலிவுட்டில் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் முன்பு மேனேஜராக பணியாற்றிய திஷா ஷலியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்வர்யா ராயின் முன்னாள் மேனேஜர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மும்பையின் மலாட் பகுதியில் உள்ள ஒரு 14 ஆவது மாடியில் திஷா ஷலியன் என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயது என்னவோ 28. இவர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 14 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து மல்வானி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், மும்பையின் தாதர் பகுதியில் திஷா ஷலியன் அவரது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து, கடந்த திங்கள் கிழமை அன்று நண்பர்களுடன் மலாட் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு, 14 ஆவது மாடியில் உள்ள நடிகர் ரோஹன் ராயின் வீட்டில் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அந்த இரவு உணவில், 6 நண்கர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தொடர்ந்து, அனைவரும் மது மருந்தியுள்ளனர். திஷா ஷலியனும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் ஜன்னல் ஓரமாக வந்து நின்றுள்ளார். அப்போது, இரவு 1 மணியளவில் நிலை தடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த திஷா ஷலியனை போலீசார் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும், வரும் வழியிலேயே அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, அவரது உடல், கண்டிவாலி பகுதியிலுள்ள சதாப்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இதைத் தொடர்ந்து, திஷா ஷலியனின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் யாரிடம் மீது சந்தேகம் தெரிவிக்கவில்லை. திஷா ஷலியன் அதிகளவில் பிரபலமானவர். அவரது எதிர்காலம் குறித்து தெளிவாக முடிவு எடுக்கக் கூடியவர் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, திஷா ஷலியனின் நண்பர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த 14 அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் தான் திஷா ஷலியனுடன் இருந்துள்ளனர்.
இறுதியாக இது விபத்தா இல்லை தற்கொலை என்பது குறித்து போலீசார் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. காரணம், திஷா ஷலியன் மது போதையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், வருண் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திஷா ஷலியனின் புகைப்படத்தை பகிர்ந்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புட், வருண் சிங் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரிடம் மேனேஜராக பணியாற்றியுள்ளார்.