Home சினிமா கோலிவுட் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு இவங்கலாம் வர்றாங்கலா?

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு இவங்கலாம் வர்றாங்கலா?

490
0
Master Audio Launch

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவுக்கு இவங்கலாம் வர்றாங்கலா? யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், அனிருத் ஆகியோருடன் படக்குழுவினர் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா இன்று நடக்க இருக்கிறது. சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடக்கும் இந்நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சி நிறுவனம் தங்களது சேனலில் நேரலை செய்கிறது.

மாஸ்டர் படத்தில் விஜய் நடித்துள்ளார். இவருடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, பிரிகிதா, கௌரி கிஷான், சாந்தணு ஆகியோர் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், அனிருத், கானா பாலசந்தர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என்பதால் அதற்கு முன்னதாக 9 ஆம் தேதி மாஸ்டர் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இன்று நடக்கும் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் இவர்கள் எல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்ற புதிய தகவல் வெளியாகி வருகிறது.

அதன்படி, மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, அவரது குடும்பத்தினர், விஜய், விஜய் குடும்பத்தினர், விஜய் சேதுபதி, அனிருத், யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், மாளவிகா மோகனன், சாந்தணு, ஆண்ட்ரியா, சஞ்சீவ், ரம்யா சுப்பிரமணியம், நாசர்,லோகேஷ் கனகராஜ், ஸ்ரீமன், பிரேம், அழகம் பெருமாள் ஆகியோருடன் பத்திரிக்கையாளர்கள், சன் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை நடிகர் சிவா மற்றும் ரம்யா சுப்பிரமணியம் ஆகியோர் தொகுத்து வழங்க வாய்ப்பிருக்கிறது. அப்படியில்லை என்றால், டிடி, மாகாபா ஆனந்த், பிரியங்கா, அர்ச்சனா, தியா, நக்‌ஷத்ரா, விக்னேஷ்காந்த் ஆகியோரில் யாரேனும் இருவர் தொகுத்து வழங்க வாய்ப்பிருக்கிறது.

இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள டிராக் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தருதல கதறுனா, அந்த கண்ண பாத்தாக்கா, ஆகிய பாடல்கள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

அந்த கண்ண பாத்தாக்கா பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது குரலில் பாடியுள்ளார். விக்னேஷ் சிவன் இந்தப் பாடலுக்கு பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.

#Yuvan, #ThalapathyVijay, #MasterTrackList, #MasterAudioLaunch, #TharudhalaKadharuna ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous article17 வருடத்திற்குப் பிறகு யுவன் விஜய் காம்போவில் அந்த கண்ண பாத்தாக்க பாடல்!
Next articleஇதெல்லாம் இன்று நடக்கும்: விஜய் மீது அதிக எதிர்பார்ப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here