Home சினிமா கோலிவுட் சந்திரமுகி படம் வெளியாகி இன்றுடன் 15 வருடம்

சந்திரமுகி படம் வெளியாகி இன்றுடன் 15 வருடம்

455
0

படையப்பா என்கிற மாபெரும் வெற்றி படத்தை தமிழ் சினிமாவிற்கு ரஜினி யும் கே.எஸ். ரவிக்குமாரும் கொடுத்தனர்.

அந்த வெற்றியை ஒரு வருடத்திற்கு மேலாக தமிழ் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதற்கு அடுத்ததாக வந்த படம்தான் பாபா.

பாட்ஷா அண்ணாமலை, வீரா போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா.

மீண்டும் பாபா படத்தில் இணைந்தார். ரஹ்மான் இசையில் மனிஷா கொய்ராலா ரஜினியுடன் இணைந்து நடிக்க, படத்தில் அரசியலும் ஆன்மிககமும் கலந்து வெளியானது.

ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் ரஜினிக்கு கட்டாயம் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் காத்திருந்தார்.

ரஜினியை வைத்து ஏற்கனவே இரண்டு படங்கள் இயக்கிய, அதாவது மன்னன் போன்ற படங்களை இயக்கிய பி. வாசு மீண்டும் ரஜினியுடன் இணைந்தார்.

ஆப்தமித்ரா படத்தை ரீமேக் செய்ய ரஜினியும் வாசும் திட்டமிட்டனர். இந்த படத்தை சிவாஜி புரோடக்ஷன் சார்பில் ராம்குமார் தயாரித்தார்.

ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு மற்றும் பலர் நடித்து இருந்தனர். இந்த படத்துக்கு வித்யாசாகர் இசை அமைத்தார்.

படத்தில் காமெடி நிறைந்த பேய் திரைப்படம். ரஜினியின் வடிவேலும் இணைந்து படத்தில் காமெடியில் கலக்கி இருப்பார்கள்.

இது ஒரு ரஜினியின் நல்ல கமர்ஷியல் படமாகவும் அமைந்தது. பாடல் தமிழகம் எங்கும் பட்டிதொட்டியெங்கும் பரவியது.

‘தேவுடா தேவுடா’, ‘அத்திந்தோம்’, ‘கொக்கு பரபர’, ‘அண்ணனோட பாட்டு’ போன்ற பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

குறிப்பாக ‘ரா ரா சரசுக்கு ராரா’ என்ற இறுதியாக வரும் பாடல் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. அந்த வருடம் முழுதும் இந்த பாடல் எல்லா இடங்களிலும் ஒளித்துக் கொண்டிருந்தது.

படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. படத்தில் பேய் பிடித்து வரும் ஜோதிகா அருமையாக நடித்திருந்தார். அவருக்கு கணவனாக வரும் பிரபுவும் தன் கதாபாத்திரத்தை தாங்கிப் பிடித்தார்.

ரஜினி வடிவேலுடன் காமெடியாகவும், வில்லன்களுடன் சண்டைகளாகவும் மற்றவர்களிடம் எதார்த்தமாகவும் நடித்து இருந்தார்.

இந்த படம் அனைவரையும் கவர்ந்தது. விநியோகஸ்தர்களுக்கு லாபம் தந்த படமாகவும் அமைந்தது.

இந்த படம் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. தற்போது இந்த படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிவிட்டன.

இன்னமும் இந்த படத்தை சன் டிவியில் ஒளிபரப்பினால் 90ஸ் கிட்ஸ் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு இந்த படத்தின் திரைக்கதை மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

சிவாஜியின் சாந்தி தியேட்டரில் ஆயிரம் நாட்களை கடந்து ஓடியது. இதற்காக ஆயிரமாவது விழா கூட எடுத்தனர்.

அதில் பேசிய ரஜினி நான் யானை அல்ல குதிரை என்று கூட பேசி பெற்றிருந்தார். எனது தோல்வியால் நான் துவண்டுவிடாமல் அடுத்த செகண்டில் எழுந்து ஓடுவேன் என்ற அர்த்தத்துடன் பேசியிருந்தார்.

இந்த விழாவில்தான் டைரக்டர் சங்கர் ‘சிவாஜி’ என்ற படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார்.

Previous articleவிஜய்யை பார்க்க ஓடோடி வந்த சங்கீதாவின் பர்த்டே டுடே!
Next articleவிஜய் குமார் டிஎஸ்பி: தெறி வந்து 4 வருசம் ஓவர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here