Home சினிமா கோலிவுட் விஜய் குமார் டிஎஸ்பி: தெறி வந்து 4 வருசம் ஓவர்!

விஜய் குமார் டிஎஸ்பி: தெறி வந்து 4 வருசம் ஓவர்!

385
0
4YearsOfATBBTheri

Theri; ஜித்து ஜில்லாடி தெறி வந்து 4 வருசம் ஓவர்! விஜய் நடிப்பில் உருவான தெறி படம் திரைக்கு வந்து இன்றுடன் 4 வருடம் ஆகிவிட்டது.

தெறி படம் திரைக்கு வந்து 4 வருடங்கள் கடந்துவிட்டது.

அட்லி – விஜய் கூட்டணியில் உருவான முதல் படம் தெறி. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தெறி படத்தைத் தயாரித்திருந்தது.

தெறி படத்தில் விஜய் உடன் இணைந்து எமி ஜாக்சன், சமந்தா, பேபி நைனிகா, மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

சுமார் ரூ.75 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட தெறி படம் ரூ.150 கோடி வரையில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்ததாக கூறப்படுகிறது.

விஜய் டிஎஸ்பி அதிகாரியாக நடித்திருந்தார். ஒரு பாலியல் பலாத்கார வழக்கை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி.

ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை அரசியல்வாதியின் மகன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கிறார். இந்த கொலையை கண்டுபிடித்து, அரசியல்வாதியின் மகனை விஜய் கொலை செய்கிறார்.

இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் விஜய்யின் அம்மா மற்றும் மனைவியை கொலை செய்கிறார்கள். அப்போது உயிருக்கு போராடும் சமந்தா விஜய்யிடம் தனது மகளுக்காக இந்த போலீஸ் வேலையை விட வேண்டும் என்று சத்யம் வாங்குகிறார்.

மனைவியின் சத்யத்திற்காக ஒதுங்கியிருக்கும் விஜய் ஒரு கட்டத்தில் தன் அம்மா, மனைவியை கொலை செய்தவர்களை பழிவாங்குகிறார்.

இதுதான் படத்தின் கதை. இந்த கதை விஜய்க்கு மட்டுமல்ல, விஜய் ரசிகர்களுக்கு பிடித்துப் போக விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது.

படம் மட்டுமல்ல படத்தில் இடம் பெற்றுள்ளபாடல்களும் தான். குறிப்பாக ஜித்து ஜில்லாடி என்ற பாடலுக்கு இன்றும் ரசிகர்கள் குத்தாட்டம் போடுவார்கள்.

அதோடு, தெறி ஆல்பம் யூடியூப்பில் மட்டும் 275 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக TheriAlbum275MViews என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு, என்ற 4YearsOfATBBTheri ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleசந்திரமுகி படம் வெளியாகி இன்றுடன் 15 வருடம்
Next articleயூடியூப்பில் 275 மில்லியன் வியூஸ் வாங்கிய தெறி ஆல்பம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here