Home சினிமா கோலிவுட் மீண்டும் சேரனின் ஆட்டோகிராஃப்: 16 ஆண்டுகள் கழித்து OTTயில் வெளியீடு!

மீண்டும் சேரனின் ஆட்டோகிராஃப்: 16 ஆண்டுகள் கழித்து OTTயில் வெளியீடு!

248
0
Autograph

Autograph Released On OTT; மீண்டும் சேரனின் ஆட்டோகிராஃப்: 16 ஆண்டுகள் கழித்து OTTயில் வெளியீடு! 16 ஆண்டுகள் கழித்து சேரன், சினேகா, கனிகா நடிப்பில் வந்த ஆட்டோகிராஃப் படம் OTTயில் வெளியாகியுள்ளது.

சேரன் நடித்த ஆட்டோகிராஃப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சேரன் தயாரித்து, இயக்கி நடித்த படம் ஆட்டோகிராஃப். கடந்த 2004 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படத்தில் சினேகா, கோபிகா, மாலிகா ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

கடந்த காலங்களில் நடந்த மறக்க முடியாத தனது காதல் வாழ்க்கையை மீண்டும் நினைவுபடுத்தி கூறும் கதையே ஆட்டோகிராஃப். இந்தப் படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில், ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதனை சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, மாய கண்ணாடி, பொக்கிஷம், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, ராஜாதி ராஜா, திருமணம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்கிறார். கடந்தாண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleகை விலங்கு உடன் ஐஸ்வர்யா ராஜேஷ்: க/பெ.ரணசிங்கம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
Next articleதெய்வம் தந்த வீடு நடிகை மேக்னா விவாகரத்து: கணவருக்கும், காதலிக்கும் திடீர் திருமணம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here