Thulluvadho Ilamai; தனுஷும், துள்ளுவதோ இளமை படமும் ஒரு பார்வை! நடிகர் தனுஷ் நடிப்பில் வந்த முதல் படம் துள்ளுவதோ இளமை வெளியாகி இன்றுடன் 18 வருடங்களை கடந்துவிட்டது.
துள்ளுவதோ இளமை வெளியாகி 18 வருடங்கள் ஆகிவிட்டது.
இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில், செல்வராகவன் திரைக்கதையில் கடந்த 2002 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி திரைக்கு வந்த படம் துள்ளுவதோ இளமை.
இந்தப் படத்தின் மூலம் தனுஷ் ஹீரோவாகவும், பிக் பாஸ் புகழ் ஷெரின் ஹீரோயினாகவும் அறிமுகம் செய்யப்பட்டனர்.
யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வீட்டை விட்டு ஓடிச் சென்று வெளியில் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தனுஷ், ஷெரின், அபினய், ஷில்பா, ரமேஷ் ஆகியோர் பள்ளிக்கூட நண்பர்கள்.
இவர்கள் 5 பேரும் வீட்டை விட்டு ஓடிச் செல்கின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பாக நடிகர் ரமேஷ் கண்ணாவும் செல்கிறார்.
வெளி உலகத்தை தங்களது இளமைப் பருவத்தாலும், போதுமான அனுபவம் இல்லாமலும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தான் படம்.
இதற்கிடையில், ஷெரின், தனுஷ் இருவரும் காதலில் மூழ்கின்றனர். இறுதியில் அவர்களது காதல் ஜெயித்ததா இல்லையா என்பது கதை.
இந்தப் படத்தில் தனது இளமைப் பருவத்திலேயே தனுஷ் இராணுவ சீருடை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பாடல்களும் அமைந்திருந்தது. அதில், நெருப்ப கூத்தடிக்குது என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பாடலாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002 ஆம் ஆண்டில் அதிக ஃபாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுத்துள்ளது. தமிழில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டது.