Theatre Reopen From June; ஜூனில் திரையரங்குகள் திறப்பு? ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்! வரும் ஜூன் மாதம் முதல் திரையரங்குகள் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
திரையரங்குகள் வரும் மே 25 ஆம் தேதி அல்லது ஜூன் மாதம் முதல் தேதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டையே ஒரு உலுக்கு உலுக்கியது கொரோனா வைரஸ். சீனாவில், தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
இதுவரை இந்தியாவில் மட்டும், கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பலி எண்ணைக்கி 2 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
இதே போன்று தமிழகத்தில், 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் காரணமாக, கடந்த மார்ச் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 17 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு, சினிமா திரையரங்குகளும் மூடப்பட்டன.
இதன் விளைவாக சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. சினிமா பிரபலங்கள், பலரும் நிதியுதவியும், பொருளுதவும் அளித்து அவர்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, திரையரங்குகள் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் என்று பேசப்பட்டது.
ஆனால், அதற்குள்ளாக வரும் 25 ஆம் தேதி அல்லது ஜூன் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் பல்வேறு விதிமுறைகளின் அடிப்படையில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது திறக்கப்படும் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இது போன்ற ஒரு செய்த உற்சாகத்தை அளித்துள்ளது.
ஏற்கனவே வரும் 11 ஆம் தேதி அதாவது நாளை முதல், எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை போன்ற பணிகளை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சினிமா, டெலிவிஷன் துறைகளில் தயாரிப்புக்கு பின் உள்ள பணிகளுக்கு வரும் 11 ஆம் தேதி முதல் அனுமதி அளிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் (ஃபெப்சி), சின்னத்திரை சங்கம் சார்பில் முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.