Home சினிமா கோலிவுட் 18 வருட சினிமா வாழ்க்கையில் தனுஷ் கடந்து வந்த பாதை!

18 வருட சினிமா வாழ்க்கையில் தனுஷ் கடந்து வந்த பாதை!

429
0
Dhanush

Dhanush; 18 வருட சினிமா வாழ்க்கையில் தனுஷ் கடந்து வந்த பாதை! நடிகர் தனுஷ் திரைக்கு வந்து இன்றுடன் 18 வருடங்களை கடந்துவிட்டார். ஆம், அவர் நடித்த துள்ளுவதோ இளமை படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆகிவிட்டது.

தனுஷ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 18 வருடங்களை கடந்து விட்டார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். தனது அப்பா கஸ்தூரி ராஜா மூலமாக ஹீரோவாக அறிமுகமானார்.

ஆம், அவரது இயக்கத்தில் வந்த துள்ளுவதோ இளமை படத்தில் முன்னணி ரோலில் நடித்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்.

இப்படத்தில் உள்ள நெருப்பு கூத்தடிக்குது பாடல் இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் பாடலாக அமைந்துள்ளது.

துள்ளுவதோ இளமை படத்திற்கு தனுஷின் சகோதரர் செல்வராகவன் திரைக்கதை அமைத்துக்கொடுத்தார். இப்படி, தனுஷை ஹீரோவாக்குவதற்கு குடும்பமே பணியாற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைத் தொடர்ந்து கடந்து 2003 ஆம் ஆண்டு திரைக்கு வந்த காதல் கொண்டே படமும் தனுஷிற்கு ஹிட் கொடுத்தது.

இந்தப் படத்தை தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கியிருந்தார். இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுக்கு தனுஷ் பரிந்துரை செய்யப்பட்டார்.

மேலும், திருடா திருடி, தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆடுகளம், 3, வேலையில்லா பட்டதாரி, மாரி, வட சென்னை, அசுரன் என்று மாஸ் படங்களில் நடித்து தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தினார்.

புதுப்பேட்டை ஒரு கேங்ஸ்டர் படம். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, புதுப்பேட்டை படத்தின் 2 ஆம் பாகமும் உருவாக இருக்கிறது. இதனை செல்வராகவன் தான் இயக்குகிறார்.

ஒரு நடிகரைத் தொடர்ந்து, இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.

பல வெற்றி, தோல்விகளை கடந்து வந்த தனுஷ், தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளார்.

தற்போது இவரது நடிப்பில், ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய தமிழ் படங்களிலும், அட்ராங்கி ரே என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ் மொழியைத் தவிர, ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் தனுஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் சினிமாவிற்கு வந்து 18 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், அவரது ரசிகர்கள் டுவிட்டரில், #18YrsOfKtownPrideDHANUSH என்ற ஹேஷ்டேக் உருவாக்கி அவரது புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஹலோவில் 18 Yrs Of Dhanush Mash Up என்ற ஹேஷ்டேக் மூலம் தனுஷை கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here