Home சினிமா கோலிவுட் 3 முறை தேசிய விருது பெற்ற தனுஷ் பர்த்டே டுடே!

3 முறை தேசிய விருது பெற்ற தனுஷ் பர்த்டே டுடே!

313
0
Dhanush Birthday Today

Dhanush; 3 முறை தேசிய விருது பெற்ற தனுஷ் பர்த்டே டுடே! நடிகர் தனுஷ் இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவரது அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வந்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

2ஆவதாக சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வந்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

திருடா திருடி, தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆடுகளம், 3, வட சென்னை, The Extraordinary Journey of the Fakir (ஆங்கிலம்), அசுரன் என்று பல படங்களில் நடித்து ஹிட்டும் கொடுத்துள்ளார்.

நடிகர் மட்டுமல்லாமல், தன்னை ஒரு இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகராகவும் காட்டிக் கொண்டுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய 4 ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 5ஆவது முறையாகவும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவும் இருக்கிறார்.

வட சென்னை, புதுப்பேட்டை ஆகிய படங்களின் 2 ஆம் பாகங்கள் உருவாக இருக்கிறது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக இருக்கிறது.

அதோடு, இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி வரும், Atrangi Re என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படி, தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் தனுஷ் இன்று 37ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில், #HappyBirthdayDhanush என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here