Home சினிமா கோலிவுட் நடிகர் ஷாம் கைது: அதிர்ச்சியில் கோலிவுட்!

நடிகர் ஷாம் கைது: அதிர்ச்சியில் கோலிவுட்!

235
0
Shaam Arrested

Shaam Arrested; நடிகர் ஷாம் கைது: அதிர்ச்சியில் கோலிவுட்! நடிகர் ஷாம் திடீரென்று கைது செய்யப்பட்டது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாம் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த குஷி படத்தில் நடித்தவர் நடிகர் ஷாம். ஆனால், இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் ஒன்றும் அவ்வளவாக பேசப்படவில்லை. 12 பி என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

12 பி படத்தைத் தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, அன்பே அன்பே, பாலா, இயற்கை, இன்பா, தில்லாலங்கடி, காவியன் என்று பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது பிஎஸ் விஜயகுமார் படத்திலும், பார்ட்டி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய 6ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக சினிமா பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடிகர் ஷாம் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

ஷாம், தனது வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ஷாம் வீட்டிற்குள் நுழைந்த போலீசார் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் முடிவில், நடிகர் ஷாம் உள்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

அப்போது, அவர்களிடமிருந்த பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஷாம் உள்பட மற்ற 13 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

இரவோடு இரவாக நடிகர் ஷாம் கைது செய்யப்பட்ட சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஆடி மாத தரிசனம் 13: கண் கொடுக்கும் தெய்வம் நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள்!
Next article3 முறை தேசிய விருது பெற்ற தனுஷ் பர்த்டே டுடே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here