Director Bala; நான் கடவுள் இயக்குநர் பாலா பர்த்டே டுடே! நான் கடவுள், பரதேசி, பிதாமகன் என்று மாஸ் படங்களை கொடுத்த இயக்குநர் பாலா இன்று தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இயக்குநர் பாலா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கடந்த 1966 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி மதுரையில் பிறந்தவர் இயக்குநர் பாலா. பாடலாசிரியர் அறிவுமதியின் உதவியுடன் பாலு மகேந்திராவிடம் பணியாற்றினார்.
பாலு மகேந்திரா இயக்கத்தில் வந்த பல படங்களில் தயாரிப்பு உதவியாளராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு சிறிது காலம், துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சியானின் சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சியான் விக்ரமிற்கு இந்தப் படம் திருப்பு முனையாக அமைந்தது. விக்ரமை சியானாக அறிமுகம் செய்தது.
முதல் படத்திற்கே பிலிம்பேர் விருது, தமிழ்நாடு மாநில விருது, தேசிய விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது என்று பல விருதுகளை பாலா பெற்றார்.
கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்கள் இந்தப் படத்தை முதலில் திரையில் பார்த்துள்ளனர். ஆனால், படத்தில் வரும் சோகமான கிளைமேக்ஸ் காட்சி காரணமாக படத்தை வாங்கி திரையிட முன்வரவில்லை.
அதன் பிறகு எப்படியோ விளம்பரம் இல்லாமலும், புரோமோஷன் இல்லாமலும், படத்தை திரையிட்டனர்.
அதன் பிறகு படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஒவ்வொரு வீடுகளிலும் சேது படம் குறித்து விமர்சனம் எழுந்தது. இதுவே படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
சேது படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, கன்னடம் (Huchcha), தெலுங்கு (Seshu) மற்றும் ஹிந்தி (Tere Naam) ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவில் புரட்சி ஏற்படுத்தக் கூடிய ஒரே இயக்குநர் யார் என்றால், அது இயக்குநர் பாலா தான். இயக்குநர், தயாரிபபாளர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.
இவர், இதுவரை, 6 தேசிய விருதுகள், 13 மாநில விருதுகள், 15 பிலிம்பேர் விருதுகள், 14 சர்வதேச திரைப்பட விருதுகள் என்று பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
சேது படத்தைத் தொடர்ந்து சியான் விக்ரமை வைத்து, பிதாமகன் படத்தை கொடுத்துள்ளார். அதன் பிறகு ஆர்யாவை வைத்து நான் கடவுள், அதர்வாவை வைத்து பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் என்று மாஸ் படங்களை கொடுத்துள்ளார்.
இப்படி, பல மாஸ் கொடுத்த இயக்குநர் பாலா இன்று தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில் HappyBidthdayBala என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.