Home நிகழ்வுகள் இந்தியா கான்பூரில் 8 காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுட்டு கொல்லப்பட்ட விகாஸ் தூபே வின் குழுவுடன்...

கான்பூரில் 8 காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சுட்டு கொல்லப்பட்ட விகாஸ் தூபே வின் குழுவுடன் தொடர்புடைய 2 பேர் குவாலியரில் கைது

விகாஸ் தூபே

உத்திர பிரதேசம்: கான்பூரில் 8 காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய கொலைகாரன் விகாஸ் தூபே மற்றும் அவனது குழுவினருடன் தொடர்புடைய 2 பேரை, உத்திர பிரதேச காவல் துறை மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் சனிக்கிழமை கைது செய்தனர்.

காவல் துறையால் சுட்டு கொல்லப்பட்ட விகாஸ் தூபே

வெள்ளிக்கிழமை காலை கான்பூர் அருகே காவல்துறையுடன் வந்த விகாஸ் தூபே தப்பிக்க முயன்ற பொழுது சுட்டு கொல்லப்பட்டான்.

விகாஸ் தூபேவின் குழுவை சேர்ந்த 2 பேருக்கு நான்கு நாட்கள் அடைக்களம் கொடுத்ததாக கூறி குவாலியரில் வசிக்கும் 2 பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் இருவர் கைது

அந்த இருவரும் இ.பி.கோ 216 இன் படி குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

விகாஸ் தூபே மற்றும் அவனது குழுவை சேர்ந்த 5 பேரும் ஜூலை 3 முதல் ஜூலை 10 க்கிடையில் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

துப்பு கொடுப்பவர்களுக்கு சன்மானம்: காவல் துறை

இவர்களை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ₹. 50,000 முதல் ₹.1,00,000 வரை சன்மானம் வழங்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleநடிகை “சனம் செட்டி” யின் நீச்சல் உடையில் இருக்கும் படங்கள் இணையதளத்தில் வைரல்
Next articleசியானின் சேது இயக்குநர் பாலா பர்த்டே டுடே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here