Sivakarthikeyan; எஸ்கேவை நான் அறிமுகம் செய்ய வேண்டியது: மனம் திறந்த பெண் இயக்குநர்! சிவகார்த்திகேயனை நான் அறிமுகம் செய்ய வேண்டியது ஏதோ ஒரு காரணத்தால் தவறிவிட்டது என்று பிரபல பெண் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனை நான் தான் அறிமுகம் செய்ய வேண்டியது என்று இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது முதல் படம் மெரினா. அதுவும், இயக்குநர் பாண்டிராஜ் இவரை அறிமுகம் செய்துள்ளார்.
மெரினா படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, நம்ம வீட்டு பிள்ளை என்று பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயனை தான் அறிமுகம் செய்திருக்க வேண்டியது என்று நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இவர் அம்மணி, நெருங்கி வா முத்தமிடாதே, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் அவரது பழைய குறும்படம் ஒன்றை பதிவிட்டு இதனை எப்போது ரிலீஸ் செய்வீர்கள் என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன் இது வெறும் குறும்படம் மட்டும் இல்லை. சிவகார்த்திகேயனை நான் தான் அறிமுகம் செய்து இருக்க வேண்டும்.
அந்த சமயத்தில் நான் அதனை கைவிட்ட பின்னரே அவர் மெரினா படத்தில் ஒப்பந்தம் ஆனார் என்று கூறியுள்ளார்.
அதோடு, சிவகார்த்திகேயனை தான் அறிமுகம் செய்யமுடியவில்லை என்று கவலைப்பட்டதாகவும் இதன் மூலம் தெரிவித்துள்ளார்.