Home சினிமா கோலிவுட் கொரோனா பாதிப்பு: இயக்குநர் பாண்டிராஜ் நிதியுதவி!

கொரோனா பாதிப்பு: இயக்குநர் பாண்டிராஜ் நிதியுதவி!

242
0
Pandiraj Corona Donation

Pandiraj Donation; கொரோனா பாதிப்பு: இயக்குநர் பாண்டிராஜ் நிதியுதவி! கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இயக்குநர் பாண்டிராஜ் ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

கடைக்குட்டி சிங்கம் இயக்குநர் பாண்டிராஜ் ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

கொரோனா பீதியில் அனைத்து உலக நாடுகளும் என்ன செய்வது என்று தவித்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் தாண்டி கொரோனா எப்படியோ இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியோ ஊரடங்கு உத்தரவு என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதால் என்னவோ அவ்வளவு ஒன்றும் பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது. எனினும், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறது.

ஏப்ரல் 14 ஆம் தேதி விதிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு உதவும் வகையில், ஃபெப்சி அமைப்பின் தலைவர் நிதி திரட்டி வருகிறார். பிரபலங்கள் பலரும் நிதியுதவி, பொருளுதவி அளித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த், கமல் ஹாசன், ராகவா லாரன்ஸ், அஜித், ஜெயம் ரவி, சூர்யா, ஹரிஷ் கல்யாண், சூரி, பிரகாஷ் ராஜ், நயன்தாரா, யோகி பாபு, மனோபாலா என்று பலரும் நிதியுதவி, பொருளுதவி அளித்துள்ளனர்.

இவர்களது பட்டியலில் தற்போது இயக்குநர் பாண்டிராஜூம் இணைந்துள்ளனர். ஆம், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleதமிழகத்தில் ஊரடங்கு மே 3 வரை நீடிக்கும்; தமிழக அரசு
Next articleகுடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நதியா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here