சென்னை: தமிழக அரசு திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கை மத்திய அரசு அறிவுறுத்தலின்படி மே 3 வரை நீடிக்க முடிவு செய்துள்ளது.
மே 3 வரை ஊரடங்கு நீடிப்பு
“தமிழகத்தில், இப்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு மற்றும் கட்டுபாடுகளை பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 இன் படி தொடர்ந்து நீடிக்கபடுவதாகவும்.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை மட்டும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது”, என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் “வைரஸ் பரவல் குறித்து மீண்டும் ஆராய்ந்து, பரவல் குறைந்த பின்பு வல்லுநர்களை கொண்டு நிலைமைக்கு தக்கபடி முடிவு எடுக்கப்படும்” என அரசு அறிவித்துள்ளது.
22 பேர் கொண்ட வல்லுநர் குழு
இந்த அறிவிப்பு, நிதி செயலாளர் எஸ். கிருஷ்ணனை தலைமையாக கொண்டு இயங்கும் 22 வல்லுநல்களைக் கொண்ட குழு, முதல்வர் எடப்பாடியிடம் சமர்ப்பித்த இடைகால அறிக்கையை கொண்டு அறிவிக்கப்பட்டது.
முதல்வர் இந்த மதிப்பாய்வை தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடத்தினார்.