Home சினிமா கோலிவுட் BetheREALMAN சவாலை ஏற்று வீட்டை கூட்டி பெருக்கி சுத்தம் செய்த இயக்குநர் ராஜமௌலி!

BetheREALMAN சவாலை ஏற்று வீட்டை கூட்டி பெருக்கி சுத்தம் செய்த இயக்குநர் ராஜமௌலி!

396
0
SS Rajamouli be The Real Man Challenge

BetheREALMAN சவாலை ஏற்று கச்சிதமாக செய்து முடித்த இயக்குநர் ராஜமௌலி! ஒரு ஆணால், தனது மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்ய முடியும் என்ற சவாலை இயக்குநர் ராஜமௌலி வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

இயக்குநர் ராஜமௌலி சவாலை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா லாக்டவுனில் பிஸியாக இருக்கும் பிரபலங்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்க்கை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரமாண்ட இயக்குநர் என்று போற்றப்படும் இயக்குநர் ராஜமௌலியும் ஒரு டாஸ்க்கை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

அர்ஜூன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் வங்கா ரெட்டி #BetheREALMAN என்ற ஹேஷ்டேக்கில் புது டுவிட்டர் சவாலை அறிமுகம் செய்துள்ளார்.

அதில், ஒரு ஆணால், தனது மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைகளை சிறப்பாக செய்து காட்ட முடியும். இது போன்ற தருணங்களில் தன்னுடைய மனைவியை தனியாக வேலை செய்ய விடமாட்டார்.

தயவு செய்து வீட்டு வேலைகளுக்கு உதவுங்கள் #BetheREALMAN. இதை ஊக்கப்படுத்தி இயக்குநர் ராஜமௌலியை ஒரு வீடியோ வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த சவாலை ஏற்றுக்கொண்ட ராஜமௌலி, வீட்டை சுத்தம் செய்து, ஜன்னல், கதவு ஆகியவற்றை துடைத்து எடுக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அவர் இந்த சவாலை வெற்றிகரமாக செய்து முடித்ததுடன் ஆர்ஆர்ஆர் RRR படத்தில் நடிக்கும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணுக்கு இந்த சவாலை கொடுத்துள்ளார்.

ஜூனியர் என்டிஆர் இயக்குநர் ராஜமௌலியின் சவாலை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleஎரித்தாலும், புதைத்தாலும் கொரோனா பரவாது: விவேக் உருக்கமான வீடியோ!
Next articleதமிழகத்தில் ஊரடங்கு மே 3 வரை நீடிக்கும்; தமிழக அரசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here