Home சினிமா கோலிவுட் எரித்தாலும், புதைத்தாலும் கொரோனா பரவாது: விவேக் உருக்கமான வீடியோ!

எரித்தாலும், புதைத்தாலும் கொரோனா பரவாது: விவேக் உருக்கமான வீடியோ!

1300
0
Vivek Request Video

Vivek Video; எரித்தாலும், புதைத்தாலும் கொரோனா பரவாது: விவேக் உருக்கமான வீடியோ! மருத்துவர் உயிரிழந்தால் கூட அவரது இறுதிச் சடங்கை போலீஸ் பாதுகாப்புடன் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று நடிகர் விவேக் உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகர் விவேக் மருத்துவருக்காக உருக்கமான வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா பீதியில் அனைத்து உலக நாடுகளும் என்ன செய்வது என்று தவித்து வருகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் தாண்டி கொரோனா எப்படியோ இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியோ ஊரடங்கு உத்தரவு என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதால் என்னவோ அவ்வளவு ஒன்றும் பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது.

எனினும், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறது. கொரோனாவால் சென்னையில் நரம்பியல் மருத்துவ உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எனினும், அவரது உடலை புதைக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட போது, வேலப்பங்காட்டு பகுதியில் அவசர அவசரமாக காவல் துறையினர் மற்றும் மருத்துவர்களே உடலை புதைத்த சோகம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து காமெடி நடிகர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: ஒரு மருத்துவர் உயிரிழந்தால் கூட அவரது உடலை போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சைமன் என்ற நரம்பியல் மருத்துவர் கொரோனாவால் பலியாகியுள்ளார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து சிகிச்சை அளித்து, அவருக்கும் தொற்று ஏற்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

அவரது உடலை கீழ்ப்பாக்கத்திலும் அடக்கம் செய்ய முடியவில்லை. அண்ணா நகரிலும் அடக்கம் செய்ய முடியவில்லை.

எங்கு பார்த்தாலும் மக்கள் தகராறு செய்கிறார்கள். கொரோனா தொற்று பரவி விடுமோ என்று பயப்படுகிறார்கள்.

சில மருத்துவ உண்மைகள் அவர்களுக்கு புரியவில்லை. உலக சுகாதார அமைப்பும், லாஜிக்கல் இந்தியா.காம் என்ற வெப்சைட்டிலும் சென்று பாருங்கள். கொரோனா வைரஸ் இறந்தவர்களின் உடலில் இருக்காது.

இறந்தவர் உடலில் இருந்து பரவாது. எரித்தாலும், புதைத்தாலும் யாருக்கும் எந்த ஆபத்தும் இருக்காது.

இதனை நான் சரியான தகவல்கள் மூலமாக தெரிந்து கொண்டு, மருத்துவர்களிடமும் கேட்ட பிறகு தான் உங்களிடம் இதனை நான் கூறுகிறேன்.

ஆதலால் யாரும் பயப்பட வேண்டாம். மருத்துவர்கள் தற்போது நடமாடும் தெய்வங்கள். அவர்களை நாம் மதிக்க வேண்டும்.

அவர் இருக்கும் போது கூட அவரை கொண்டாடா விட்டாலும், அவர் இறந்த பிறகும் கூட அவரை அவமானப்படுத்தாலம் இருந்தால் போதும். அவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.

குடும்பத்திற்கு இது பெரிய மன வருத்தத்தை அளித்திருக்கும். அவர்களுக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்வோம். மனித நேயத்தைக் காப்போம். நன்றி…என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, ஹலோவில் விவேக் வேண்டுகோள் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleஊரடங்கு: மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் தோழியை திருமணம் கணவர்
Next articleBetheREALMAN சவாலை ஏற்று வீட்டை கூட்டி பெருக்கி சுத்தம் செய்த இயக்குநர் ராஜமௌலி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here