இந்தியா: இந்தியாவில் கொரோனா காரணமாக, ஊரடங்கு மார்ச் 24 முதல் கடைபிடிக்கப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு உள்ளது. இதனால், வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இச்சம்பவம் குறித்து காவலர் ஒருவர் கூறுகையில், பாட்னா நகரத்தில் பலிகாஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் தீரஜ்குமார் இவருக்கு குடியா தேவி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.
சிறிது நாட்களுக்கு முன் 60கிமீ தொலைவில் உள்ள தன் மனைவியின் சொந்த ஊரான ஜெகனாபாத் என்ற பாட்னாவின் தெற்கு பகுதிக்கு அவரது கணவர் தீரஜ் அனுப்பிவைத்தார்.
இந்நிலையில் பெற்றோரை காண சென்ற மனைவியை ஊருக்கு திரும்ப வருமாறு தீரஜ்குமார் மனைவியிடம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் அவரது மனைவி அன்று முதல் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததால் சரியான போக்குவரத்து இல்லை எனவும் தன்னால் தீரஜ்குமார் இருக்கும் இடத்திற்கு வரமுடியாது என்றும் கூறினார்.
இதனை கேட்ட தீரஜ் தனது மனைவியை பழிவாங்கும் எண்ணத்தில் அருகாமையில் வசித்த தனது தோழியை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்துவந்துள்ளார்.
இதனை உடனடியாக அறிந்த தீரஜ்ஜின் மனைவி தனது பெற்றொருடன் சென்று டல்ஹின் பஜார் என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் கணவருக்கு எதிராக புகார் செய்துள்ளார்.
இந்த வழக்கை பற்றி அசோக் குமார் என்ற போலீஸ் அதிகாரி கூறுகையில், “கடந்த வெள்ளிக்கிழமை இந்த புகாரை ஏற்றுக்கொண்டோம், தற்போது தீரஜ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளோம்” என கடந்த சனிக்கிழமை தொலைபேசியில் தெரிவித்தார்.