Home சினிமா கோலிவுட் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு!

ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு!

382
0
RK Nagar In Netflix

RK Nagar Movie In Netflix; ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு! இயக்குநர் வெங்கட் பிரபு தனது படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சூர்யாவுக்கு முன் இயக்குனர் வெங்கட் பிரபு தான் தயாரித்த படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு, புதுப்படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

சிறிய பட்ஜெட் படங்கள் முதல் மாஸ் ஹீரோவின் பெரிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்து படங்களுமே தள்ளிப்போயுள்ளது.

இனி திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், சிறிய பட்ஜெட் படங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம் தான்.

இதன் காரணமாக சிறிய பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர்.

அந்த வகையில், சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இனி சூர்யா மற்றும் அவரது சார்பில் வரும் படங்களுக்கு திரையரங்குகளில் அனுமதி கிடையாது என்று முடிவு செய்யப்பட்டது.

இது தயாரிப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சூர்யாவுக்கு முன்னதாக, இயக்குநர் வெங்கட் பிரபு தனது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆம், வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி மூலம் தயாரித்துள்ள ஆர்கே நகர் படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் எனும் டிஜிட்டல் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆர்கே நகர் படத்தில் வைபவ், சனா அல்தாஃப் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். பிரேம்ஜி அமரன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleதமிழ்நாட்டின் ஊரடங்கால் 1000கிமீ தூரம் தப்பிச்சென்ற 90 மீனவர்கள்
Next articleஇப்படியொரு பர்த்டே கிப்ட் கேட்ட பிரியங்கா: கிடச்சுச்சா இல்லையா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here